ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உத்தமவில்லன் நஷ்டம்... கமல் அளித்த வாக்குறுதி.. மனம் திறந்த லிங்குசாமி!

உத்தமவில்லன் நஷ்டம்... கமல் அளித்த வாக்குறுதி.. மனம் திறந்த லிங்குசாமி!

லிங்குசாமி, கமல்

லிங்குசாமி, கமல்

கடந்த 2015ஆம் ஆண்டு  உத்தம வில்லன் படம் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உத்தம் வில்லன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால், பல படங்களை வெளியிட முடியாத நிலையில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இருப்பதாக இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் உத்தம வில்லன். இந்தப் படத்தை ரமேஷ் அரவிந்தன் இயக்கியுள்ளார். கதை கமல் ஹாசன். இவருடன், கே.பாலசந்தர், ஊர்வசி, கே.விஸ்வநாத், ஆண்ட்ரியா ஜெரெமையா, பூஜா குமார், நாசர், ஜெயராம், எஸ்.எஸ்.பாஸ்கர் என பலர் நடித்திருந்தனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு  இந்த படம் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது.

இந்நிலையில் அறிமுக இயக்குநர் ஜெகன் இயக்கத்தில் வினோத் கிஷன், கௌரி ஆகியோர் நடித்துள்ள ‘பிகினிங்’ திரைப்படத்தை, இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. பின்னர் பேசிய இயக்குநர் லிங்குசாமி, உத்தம் வில்லன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால், பல படங்களை வெளியிட முடியாத நிலையில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இருப்பதாக தெரிவித்தார்.

இதனால்  உத்தம வில்லன் படத்தின் நஷ்டத்திற்கு ஈடு செய்வதற்காக கமல்ஹாசன் இன்னொரு படம் தங்கள் நிறுவனத்திற்கு நடித்துக் கொடுக்க ஒப்புக் கொண்டிருப்பதாக லிங்குசாமி தெரிவித்துள்ளார். மேலும், திருப்பதி பிரதர்ஸ் நிறுவன தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க கமல்ஹாசன் உறுதியளித்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும், கமல்ஹாசனிடம் பாபநாசம் படத்தை தயாரிப்பதற்காகவே சென்றோம் எனவும் இயக்குநர் லிங்குசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Also read... பிரின்ஸ் திரைப்படத்தின் நஷ்டத்திற்கு பொறுப்பேற்ற சிவகார்த்திகேயன்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Director lingusamy, Kamal Haasan