முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Kamal Haasan-Vetrimaaran: கமல் ஹாசனை இயக்கும் வெற்றிமாறன்?

Kamal Haasan-Vetrimaaran: கமல் ஹாசனை இயக்கும் வெற்றிமாறன்?

வெற்றிமாறன் - கமல் ஹாசன்

வெற்றிமாறன் - கமல் ஹாசன்

இந்த வருடம் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, வாடிவாசல் என இரு படங்கள் தயாராகின்றன.

  • Last Updated :

இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த சமகால இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவனில் தொடங்கிய அவரது பயணம் ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என படத்துக்குப் படம் மெருகேறுகிறது. வெற்றிமாறன் படம் என்று வடஇந்திய ரசிகர்களும், விமர்சகர்களும் குறிப்பிடும் அளவுக்கு அவரது பெயர் இந்தியாவெங்கும் பரவியிருக்கிறது. அவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார் என்பதே இன்றைய ஸ்கூப் செய்தி.

வெற்றிமாறன் இதுவரை இயக்கிய 5 படங்களில் நான்கில் தனுஷ் நாயகன். ஒன்றில் அட்டக்கத்தி தினேஷ். இப்போது தான் விஜய் சேதுபதி, சூர்யா என்று தனுஷிடமிருந்து விலகி வந்திருக்கிறார். அத்துடன், பல வருடங்களுக்கு ஒரு படம் என்ற இடைவெளியையும் குறைத்துள்ளார்.

இந்த வருடம் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, வாடிவாசல் என இரு படங்கள் தயாராகின்றன. விடுதலையில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கின்றனர். ஜெயமோகன் எழுதிய சிறுகதையை தழுவி இது எடுக்கப்படுகிறது. இன்னொரு படம் வாடிவாசல். சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவி எடுக்கப்படுகிறது. சூர்யா நாயகன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து அவர் கமல்ஹாசனை இயக்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் உறுதி செய்யவில்லை. எனினும், வெற்றிமாறன் - கமல்ஹாசன் என்ற காம்பினேஷனே ரசிகர்களுக்கு த்ரில்லை கொடுத்துள்ளது. 2024 வரை எந்தத் தேர்தலும் வரப்போவதில்லை என்பதால் கமலும் தனது நடிப்பு வேலையில் முழுக்கவனம் செலுத்துகிறார். விக்ரம், இந்தியன் 2 படங்கள் அவரது நடிப்பில் உருவாகின்றன. இதில் இந்தியன் 2 இயக்குனர் - தயாரிப்பாளர் பிரச்சனையில் பாதியில் நிற்கிறது. விக்ரம் படத்தை முடித்த பின் தொடர்ந்து அவர் வேறு படங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று வெற்றிமாறன் படம் என்கிறார்கள்.

அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் உண்மையானால் மகிழ்ச்சி தான்!

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Director vetrimaran, Kamal Haasan