முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெறித்தனமான ஆக்சன் பிளாக் வெயிட்டிங் - 'இந்தியன் 2' ஷூட்டிங் ஸ்பாட்.. கமல் பகிர்ந்த போட்டோ

வெறித்தனமான ஆக்சன் பிளாக் வெயிட்டிங் - 'இந்தியன் 2' ஷூட்டிங் ஸ்பாட்.. கமல் பகிர்ந்த போட்டோ

இந்தியன் 2 சண்டைக்காட்சி வடிவமைப்பாளர்களுடன் கமல்

இந்தியன் 2 சண்டைக்காட்சி வடிவமைப்பாளர்களுடன் கமல்

விக்ரம் படத்தில் பழைய விக்ரம் பட தீம் இசை பயன்படுத்தப்பட்டதுபோல இந்தியன் 2 படத்தில் இந்தியன் பட பின்னணி இசை பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியன் 2 படத்துக்காக வெளிநாட்டு சண்டைகாட்சி வடிவமைப்பாளர்கள் குழுவுடன் கமல்ஹாசன் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், இதனையடுத்து விக்ரம் போல இந்தப் படத்திலும் அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகளை எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இந்தியன் 2 படத்தில் சண்டை வடிவமைப்பு செய்பவர்கள் ஜாக்கி சான் படங்களில் சண்டை காட்சிகள் வடிவமைப்பு செய்தவர்கள் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருது விழாவுக்காக ராம் சரண் அமெரிக்காவில் இருப்பதால் ஆர்சி 15 படம் துவங்க தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது. அந்த இடைவேளையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இந்தியன் 2 படத்தில் ஷங்கர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தப் படத்துக்காக முதன்முறையாக அனிருத்துடன் ஷங்கர் கைகோர்த்திருக்கிறார். விக்ரம் படத்தில் பழைய விக்ரம் பட தீம் இசை பயன்படுத்தப்பட்டதுபோல இந்தியன் 2 படத்தில் இந்தியன் பட பின்னணி இசை பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.




 




View this post on Instagram





 

A post shared by Kamal Haasan (@ikamalhaasan)



இந்தப் படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, மாரிமுத்து என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகின்றனர். மறைந்த நடிகர் விவேக் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். எதிர்பாரதவிதமாக அவர் மறைந்ததால் அவருக்கு பதிலாக வேறு நடிகர் அந்த வேடத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை விவேக் நடித்திருந்தால் கமல்ஹாசனுடன் விவேக் இணையும் முதல் படமாக இந்தியன் 2 இருந்திருக்கும்.


First published:

Tags: Anirudh, Indian 2, Kamal Haasan