ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''வாருங்கள் புதிய இந்தியா படைப்போம்; நாளை நமதே...'' - ராகுலின் நடைபயணத்துக்கு கமல் அழைப்பு

''வாருங்கள் புதிய இந்தியா படைப்போம்; நாளை நமதே...'' - ராகுலின் நடைபயணத்துக்கு கமல் அழைப்பு

ராகுல் காந்தி - கமல்ஹாசன்

ராகுல் காந்தி - கமல்ஹாசன்

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இம்முயற்சியில் தலைநகரில் வாழும் தமிழர்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்பது என் ஆசை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ராகுல் காந்தி தற்போது பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்தியாவின் ஒற்றுமைக்கான நடைபயணத்தில் ஈடுபட்டுவருகிறார். தமிழகத்தில் துவங்கிய அவரது பயணம் தற்போது 100 நாட்களைக் கடந்துள்ளது.

இந்த நிகழ்வில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபலங்கள் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் இணைந்தனர். இதன் ஒரு பகுதியாக நாளை டெல்லியில் நடைபெறவிருக்கும் யாத்திரையில் கமல்ஹாசன் கலந்துகொள்ளவிருப்பாக கூறப்பட்டது. இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவரான மவுரியா சமீபத்தில் உறுதி செய்தார்.

இதையும் படிக்க | மிஸ் பண்ணிடாதீங்க...! இந்த ஆண்டின் தமிழின் சிறந்த 5 வெப் சீரிஸ்கள்!

இதுதொடர்பாக கமல்ஹாசன் பேசும் வீடியோ ஒன்றை மக்கள் நீதி மய்யம் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கமல்ஹாசன் பேசுவதாவது, ''பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ளும்படி ராகுல் காந்தி எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஒரு இந்தியனாக இழந்து கொண்டிருக்கும் மாண்பை மீட்டெடுக்கும் முயற்சியாக இதனை நான் கருதுகிறேன்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இம்முயற்சியில் தலைநகரில் வாழும் தமிழர்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்பது என் ஆசை. இது தேசத்திற்கான ஒரு நடைபயணம். இது கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. டிசம்பர் 24, 2022 நான் உங்களிடத்தில் வருகிறேன். உங்கள் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். வாருங்கள் புதிய இந்தியா படைப்போம், நாளை நமதே'' என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Congress, Kamal Haasan, Rahul gandhi