Home /News /entertainment /

இந்தியன் 2 அட்டகாச அறிவிப்பை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

இந்தியன் 2 அட்டகாச அறிவிப்பை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

இந்தியன் 2

இந்தியன் 2

இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை இன்று இரவு வெளியிடுகிறது ரெட் ஜெயண்ட் நிறுவனம். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது. அதை இன்று இரவு 12 மணிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. 

ஷங்கர் - கமல் கூட்டணியில் லைகா தயாரிப்பில் உருவான படம் இந்தியன் 2. தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது.

இந்த நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் மீண்டும் தொடங்குகிறார். அதற்கான படப்பிடிப்பு நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்த திரைப்படத்தை ஆரம்பத்தில் லைகா நிறுவனம் தனியாக தயாரித்தது. ஆனால் தற்போது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளது.



நாளை தொடங்கும் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை. அவர் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் இந்தியன் 2 படத்தில் இணைவார் எனக் கூறப்படுகிறது. கமல்ஹாசன் அல்லாத காட்சிகளை இயக்குநர் ஷங்கர் படமாக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரெட் ஜெயன் நிறுவனம் இன்று இரவு 12:01 மணிக்கு அறிவிக்க உள்ளது.

அருண் விஜய்யின் சினம் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அதேபோல் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் சில காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Shalini C
First published:

Tags: Director Shankar, Kamal Haasan, Udhayanidhi Stalin

அடுத்த செய்தி