கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதற்கு முன்னதாக கமல் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தை வினோத் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக நடிகர் கமல்ஹாசன் தெரிவிக்கும் அரசியல் ரீதியான கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன. அந்த வகையில் இன்று பா.ரஞ்சித்தின் நீலம் புத்தக அரங்கை திறந்துவைத்து நடிகர் கமல்ஹாசன் பேசினார். அப்போது பேசிய அவர், அரசியலையும் கலாச்சாரத்தையும் தனியாக வைத்திருக்க வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம். நாம் உருவாக்கியது தான் அரசியல். மக்களுக்கானது தான் அரசியல். அதனை தலைகீழாக திருப்பிப்போட்டு பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆளும் கட்சி, ஆள்பவர்கள் என்ற வார்த்தையே வரக்கூடாது என நினைக்கிறேன்.
தலைவர்களை வெளியே தேடிக்கொண்டிருக்கும் தலைவர்களில் பலர் கீழே குடிமகன்களாக அமர்ந்திருக்கிறார்கள். சாதி தான் என் முதல் எதிரி. அதனை நான் 21வது வயதிலேயே சொல்லிவிட்டேன். அரசியல் ரீதியான பிறகு சில சமசரங்கள் செய்ய வேண்டியுள்ளது.
சக்கரத்திற்கு பிறகு மனிதனின் மாபெரும் சிருஷ்டி கடவுள். அதனை மறந்துவிடக் கூடாது. நம்முடைய உருவாக்கம் நம்மையே தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதில் கொடூரமான ஆயுதம் சாதி. அதை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என எனக்கு மூன்று தலைமுறைக்கு முந்தைய அம்பேத்கரிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்னும் நடந்தபாடில்லை. அந்த தொடர் போராட்டத்தின் நீட்சியாகத் தான் நீலம் பண்பாட்டு மையத்தையும் பார்க்கிறேன். ஸ்பெல்லிங் வேறாக இருக்கலாம். மையமும் நீலமும் ஒன்று தான். அரசியல் ரீதியான பிறகு சில சமசரங்கள் செய்ய வேண்டியுள்ளது. என்னையும் உங்களில் ஒருவரக சேர்த்துக்கொண்டதில் மகிழ்ச்சி என்று பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamal Haasan, Pa. ranjith