ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மன்னிப்பு கேட்கும் விதமாக ஹேராம் படத்தை இயக்கினேன் - கமல் ஹாசன்

மன்னிப்பு கேட்கும் விதமாக ஹேராம் படத்தை இயக்கினேன் - கமல் ஹாசன்

ஹேராம் கமல் ஹாசன்

ஹேராம் கமல் ஹாசன்

காந்திஜியைக் கொல்ல வேண்டும் என்று கொலையாளியாக நடித்த நான், உண்மையை நெருங்கிச் செல்லும்போது, மனம் மாறும்படி கதை அமைந்திருக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஹேராம் திரைப்படத்தை இயக்கியதற்கான காரணத்தை ராகுல்காந்தியுடனான உரையாடலில் தெரிவித்துள்ளார் கமல் ஹாசன். 

கமல்ஹாசனின் ஐகானிக் திரைப்படங்களில் ஒன்று அவரே எழுதி, இயக்கி, தயாரித்த 'ஹே ராம்'. இப்படத்தில் சாகேத் ராம் என்ற முக்கிய வேடத்தில் அவர் நடித்திருந்தார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அந்தப் படத்தைப் பற்றி அடிக்கடி பேசி வரும் கமல், தற்போது அந்த படத்தைத் தயாரிப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.

சமீபத்தில் ராகுல் காந்தியுடன் உரையாடிய கமல்ஹாசன், மகாத்மா காந்தி குறித்து பேசுகையில், "நான் பதின்பருவத்தில் இருந்தபோது எனது சூழல், என்னை காந்தியின் கசப்பான விமர்சகனாக மாற்றியது" என்று கூறினார். மேலும் தொடர்ந்த அவர், "சுமார் 24-25 வயதில், காந்தியை ஆழமாக தெரிந்துக் கொண்டு, விரைவில் ரசிகனாக மாறிவிட்டேன். வழக்கறிஞராக இருந்த என் அப்பா, என்னிடம் வாதாட விரும்பவில்லை. மாறாக வரலாற்றை படிக்காமல் இன்றைய நிலைமையில் இருந்து பேச வேண்டாம் என்று மட்டுமே சொன்னார்.

தவறை திருத்திக் கொள்ளவும், மன்னிப்பு கேட்கவும் தான் நான் 'ஹே ராம்' படத்தை உருவாக்கினேன். காந்திஜியைக் கொல்ல வேண்டும் என்று கொலையாளியாக நடித்த நான், உண்மையை நெருங்கிச் செல்லும்போது, மனம் மாறும்படி கதை அமைந்திருக்கும். என் அப்பாவிடம் மன்னிப்பு கேட்பது அதுதான்" என்று கமல்ஹாசன் கூறினார்.

வாரிசு ஆடியோ லாஞ்சில் விஜய் மனைவி சங்கீதா ஏன் கலந்துக் கொள்ளவில்லை தெரியுமா?

' isDesktop="true" id="866331" youtubeid="IbvUUFUhD8Y" category="cinema">

கமல் இயக்கி நடித்த ஹேராம் படத்தில் ஷாருக்கான், ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், அதுல் குல்கர்னி மற்றும் கிரிஷ் கர்னாட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இருமொழித் திரைப்படமான இது இந்தியப் பிரிவினை மற்றும் மகாத்மா காந்தியின் படுகொலை ஆகியவற்றை மையப்படுத்தி இயக்கப்பட்டிருந்தது. இந்த பீரியட் படத்தை கமல்ஹாசன் எழுதி இயக்கி, தயாரித்து, நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்திருந்த இப்படம் தமிழின் கிளாசிக் படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kamal Haasan, Rahul gandhi