’உங்களால் கற்றுக் கொள்ள முடியும் எனத் தெரியவில்லை’ அல்போன்ஸ் புத்திரன் கேள்விக்கு கமல் பதில்

கமல் ஹாசன் - அல்போன்ஸ் புத்திரன்

’விரைவில் சொல்கிறேன். ஆனால், அதில் உங்களால் எவ்வளவு கற்றுக் கொள்ள முடியும் எனத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை அது ஒரு மாஸ்டர் கிளாஸ் படிப்பு’

 • Share this:
  இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் மைக்கேல் மதன காமராஜன் படம் குறித்துக் கேட்ட கேள்விக்கு, கமல் பதில் கூறியுள்ளார்.

  நேரம், பிரேமம் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கம் தாண்டி எடிட்டிங் உள்ளிட்ட சினிமாவின் பிற தொழில்நுட்பங்களில் நுட்பமான அறிவு கொண்டவர். ப்ரியதர்ஷன் மோகன்லாலை வைத்து இயக்கிய ஒப்பம் படத்தின் ட்ரெய்லரை எடிட் செய்யும் பொறுப்பை அல்போன்ஸ் புத்திரனிடம்தான் தந்திருந்தார். அந்தளவு எடிட்டிங்கில் திறமை வாய்ந்தவர்.

  சமீபத்தில் தசாவதாரம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அப்படத்தை உருவாக்கியது குறித்து சுவாரஸியமான தகவல்களை கமல் பகிர்ந்திருந்தார். அதற்கு அல்போன்ஸ் புத்திரன், ’உங்களின் தசாவதாரம் பிஹெச்டி என்றால், மைக்கேல் மதன காமராஜன் ஒரு டிகிரி படிப்புப் போல. இந்தப் படத்தையும் எப்படி படமாக்கினீர்கள் என்று கூற முடியுமா’ என்று கேட்டிருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதற்கு பதிலளித்துள்ள கமல், ’விரைவில் சொல்கிறேன். ஆனால், அதில் உங்களால் எவ்வளவு கற்றுக் கொள்ள முடியும் எனத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை அது ஒரு மாஸ்டர் கிளாஸ் படிப்பு. அதைப் பற்றி இத்தனை ஆண்டுகளுகள் கழித்து பேசுவது எனக்குப் புதிய பாடங்களை கற்றுத் தரும்’ என்றார்.

  பிரேமம் படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட அல்போன்ஸ் புத்திரன் பகத் ஃபாசிலை வைத்து பாட்டு என்ற படத்தை எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். அதேபோல், ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்படுவதாக கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: