ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'சமமாக நடத்தப்படும் போது குடியரசு முழுமையடையும்' - கமல்ஹாசன் குடியரசு தின வாழ்த்து!

'சமமாக நடத்தப்படும் போது குடியரசு முழுமையடையும்' - கமல்ஹாசன் குடியரசு தின வாழ்த்து!

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

கமல் ஹாசன் தனது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் கமல் ஹாசன் தனது குடியரசு தின வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. முன்னதாக இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

2 ஆண்டு, 11 மாதம் 18 நாட்களில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நாளையே ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று நாட்டின் 74-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குடியரசு தின விழாவில் கலந்துக் கொண்டனர். இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவருமான கமல் ஹாசன் தனது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதில், “ஒவ்வொரு மனிதரும் சமமாக நடத்தப்படும்போது தான் குடியரசு அதன் முழுமையான அர்த்தத்தை எட்டுகிறது. நாட்டின் இறையாண்மை குடிமக்களிடமே நிலைகொண்டுள்ளது என்பதை உணர்த்திய முன்னோடிகளை வணங்கி சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய உறுதி ஏற்போம். குடியரசு தின நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kamal Haasan, Republic day