Home /News /entertainment /

விக்ரம் படத்துக்குப் பிறகு கமலுக்கு எல்லாமே வெற்றி தான்... இப்போது இன்னொரு சந்தோஷம்!

விக்ரம் படத்துக்குப் பிறகு கமலுக்கு எல்லாமே வெற்றி தான்... இப்போது இன்னொரு சந்தோஷம்!

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

2019-ல் கோல்டன் விசா அறிமுகப்படுத்தப்பட்டபோது, UAE நிர்வாகம் அதற்காக பரிந்துரைத்த முதல் தேர்வில் கமல்ஹாசனும் ஒருவர்.

    நடிகர் கமல் ஹாசனுக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசாவை வழங்கியுள்ளது.

    நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைக் கொண்ட நடிகர் கமல்ஹாசன் ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவைப் பெற்ற தமிழ் நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். தற்போது துபாயில் இருக்கும் கமல்ஹாசன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அதோடு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு அமைச்சரான ஹைனஸ் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானை அரண்மனையில் சந்தித்தார்.

    2019-ல் கோல்டன் விசா அறிமுகப்படுத்தப்பட்டபோது, UAE நிர்வாகம் அதற்காக பரிந்துரைத்த முதல் தேர்வில் கமல்ஹாசனும் ஒருவர். ஆனால் தொற்றுநோய், அரசியல் பணி மற்றும் பட வேலைகளின் காரணமாக, அவரால் அதைப் பெற முடியவில்லை என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கமல்ஹாசன் தவிர, பார்த்திபன், விஜய் சேதுபதி, த்ரிஷா, மோகன்லால், மம்மூட்டி, டொவினோ தாமஸ், துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமலா பால் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசாவைப் பெற்றுள்ளனர்.

    விஜய்யின் அரபிக் குத்து பாடலை அச்சு அசலாக மறு உருவாக்கம் செய்த ரசிகர்கள் - வைரல் வீடியோ!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தை விளம்பரப்படுத்த கமல்ஹாசன் துபாய் சென்றுள்ளார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் விக்ரம் படம் அதிகம் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Kamal Haasan

    அடுத்த செய்தி