நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் வழி பேரனும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக இருந்து, நடிகரானார். தற்போது மாரி செல்வராஜின் மாமன்னன், மகிழ் திருமேனியின் கலக தலைவன் ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக உதய்யின் நடிப்பி நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தவிர, திமுக-வின் இளைஞரணி செயலாளரான உதய், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு பிரமாண்ட வெற்றியையும் பெற்றார். ஒரு சட்ட மன்ற உறுப்பினர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதைப் போல, தனது தொகுதியில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
இதையடுத்து படங்களுக்கு குட் பை சொல்லிவிட்டு, தன்னை முழுமையாக அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ள உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாகவும், மாமன்னன் தான் அவர் நடிக்கும் கடைசி படம் என்றும் கடந்த சில மாதங்களாக இணையத்தில் வதந்தி பரவியது. ஆனால் இதை உதய் மறுத்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விஜய் சேதுபதியுடனான படங்களைப் பகிர்ந்த காத்ரீனா கைஃப் - லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்!
இந்நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் உதயநிதி. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. ஆகவே தனது தயாரிப்பு நிறுவனத்தில் பங்களிப்பு செய்தவர்களை கெளரவிக்கும் விதமாக நேற்று விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வில் தனது தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கமல்.
சமீபத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இதையடுத்து கமல் தயாரிப்பில் நடிக்கிறார் உதய். படத்தின் இயக்குநர், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. அரசியலில் வெவ்வேறு துருவத்தில் இருக்கும் உதய்யும், கமலும் சினிமாவில் இணைந்து பயணிப்பது ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.