Home /News /entertainment /

Kamal Haasan: விக்ரம் வெற்றி விழாவில் ட்ரம்ஸ் வாசித்து அசத்திய கமல்!

Kamal Haasan: விக்ரம் வெற்றி விழாவில் ட்ரம்ஸ் வாசித்து அசத்திய கமல்!

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

விக்ரம் படம் உலகம் முழுவதும் சுமார் ரூ 450 கோடிகளை வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விக்ரம் படத்தின் வெற்றி விழாவில் நடிகர் கமல் ஹாசன் ட்ரம்ஸ் வாசித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கமல்ஹாசன் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மெகா பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டர் படமான 'விக்ரம்' படத்தில் நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் 100 நாட்களைக் கடந்தது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 'விக்ரம்' திரையிடப்படும் தியேட்டர்களுக்குச் சென்று வருகிறார் கமல்.

    இதற்கிடையே தனது சமீபத்திய விசிட்டில் சிறந்த பாடகரும், இசை அறிவு கொண்டவருமான கமல், டிரம்ஸ் வாசித்துள்ளார். இது ரசிகர்களை வெறித்தனமாக ஆக்கியது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் 'விக்ரம்' படத்தில் RAW ஏஜெண்டாக நடித்திருந்தார். 1989-ஆம் ஆண்டு கமல் நடித்திருந்த விக்ரம் படத்துடன் இப்படம் தொடர்பு படுத்தப்பட்டிருந்தது. கமல் ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், நரேன், செம்பன் வினோத், ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருந்தார். விக்ரம் படம் உலகம் முழுவதும் சுமார் ரூ 450 கோடிகளை வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.



    வெற்றிமாறனின் விடுதலை மேக்கிங் ஸ்டில்ஸ்!



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய கமல்ஹாசன் தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இன்னும் ஓரிரு மாதங்களில் இயக்குனர் மகேஷ் நாராயணனுடன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்குவார் என்றும் அந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Kamal Haasan

    அடுத்த செய்தி