Kamal Haasan: மூளை புற்றுநோயுடன் போராடும் ரசிகர் - வீடியோ கால் செய்து நம்பிக்கையூட்டிய கமல்!

ரசிகருடன் பேசிய கமல்

தனது மகனுக்கு விருமாண்டி என செல்ல பெயர் வைத்திருக்கும் விஷயத்தையும் சகேத் அப்போது வெளிப்படுத்தினார்.

  • Share this:
    மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது ரசிகரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு, அவரை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார் நடிகர் கமல் ஹாசன்.

    தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ள கமல் ஹாசன், திரைக்கு வெளியே செய்த நிகழ்வு சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகளை குவித்து வருகிறது. மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது ரசிகர் ஒருவரை ஜூம் வீடியோவில் தொடர்புக் கொண்ட கமல், அவரிடம் உரையாடி மகிழ்வித்திருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தனது தீவிர ரசிகர் சகேத்துடன் முழுதாக பத்து நிமிடங்கள் வீடியோ காலில் பேசிய கமல், சோர்ந்து போகாமல் தொடர்ந்து மூளை புற்றுநோய்க்கு எதிராக போராடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சகேத் கமல்ஹாசனுடன் பேசுவதற்காக நீண்ட காலமாக ஏங்கியிருக்கிறார். அவரது நெருக்கடியான சூழ்நிலையைப் பற்றி அறிந்துக் கொண்ட கமல், அவரை வீடியோ காலில் சந்திக்க உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். அந்த உரையாடலில் கண்ணீர், சிரிப்பு, புன்னகை என எல்லாமே இருந்தது. தனது மகனுக்கு விருமாண்டி என செல்ல பெயர் வைத்திருக்கும் விஷயத்தையும் சகேத் அப்போது வெளிப்படுத்தினார்.

    இதனை சந்தியா வைத்தியநாதன் என்பவர் சமூக வலைதளங்களில் பகிர, உடனடியாக வைரலாகியதோடு, கமலுக்கு பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது. தவிர கமல் தற்போது ’விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இதனை இயக்குகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: