‘எவனென்று நினைத்தாய்’ டைட்டில் இல்லையா? கமலின் 232-வது பட டைட்டில் பற்றி வெளியான அப்டேட்..

கமல்ஹாசனின் 232-வது படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘எவனென்று நினைத்தாய்’ டைட்டில் இல்லையா? கமலின் 232-வது பட டைட்டில் பற்றி வெளியான அப்டேட்..
லோகேஷ் கனகராஜ்
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 2:11 PM IST
  • Share this:
மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்து மக்களிடம் கவனம் பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது 3-வது படத்திலேயே விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளார். ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போயுள்ளது. கொரோனா பிரச்னை முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் ‘மாஸ்டர்’ திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் தனது 4-வது படத்தில் உலகநாயகன் உடன் கரம் கோர்த்துள்ளார். அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் கமல்ஹாசன் நடிக்கும் 232-வது படம். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிடும் போது #எவனென்று நினைத்தாய் என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி போஸ்டர் வெளியிட்டார். இதனால் எவனென்று நினைத்தாய் என்பது தான் படத்தின் டைட்டில் என்று பலரும் புரிந்துகொண்டனர். ஆனால் அது வெறும் ஹேஷ்டேக் தான் என்றும், படத்தின் டைட்டில் அல்ல என்றும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்தது.


இந்நிலையில் தற்போது படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தப் படத்துக்கு ‘குரு’ என்று டைட்டில் வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் நடிப்பில் ‘குரு’ என்ற டைட்டிலில் திரைப்படம் வெளியாகியிருக்கிறது.அதேபோல் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பிலும் 1980-ம் ஆண்டு ‘குரு’ என்ற படம் வெளியாகியிருக்கிறது. எனவே அதே டைட்டிலை லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்துக்கும் பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading