Home /News /entertainment /

விக்ரம் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2-வில் கவனம் செலுத்தும் கமல் ஹாசன்!

விக்ரம் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2-வில் கவனம் செலுத்தும் கமல் ஹாசன்!

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

இந்தியன் 2 படம் 2017-ல் அறிவிக்கப்பட்டு 2019-ல் படப்பிடிப்பு துவங்க திட்டமிடப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக தாமதமானது.

    விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல் ஹாசன் இந்தியன் 2 வேலைகளை தொடங்க உள்ளார்.

    நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் 50 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படம் உலகளவில் ரூ.450 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நீண்டகாலமாக தயாரிப்பில் இருக்கும் ‘இந்தியன் 2’ படத்துக்கான வேலையை மீண்டும் தொடங்க உள்ளார் கமல்.

    இப்படத்திற்கான தயாரிப்பு பணிகளை தொடங்குவதற்காக கமல்ஹாசன் மூன்று வாரங்கள் அமெரிக்காவில் இருப்பார் எனக் கூறப்படுகிறது. செப்டம்பரில் இந்தியன் 2 படம் தொடங்கும் என்றும், அடுத்த மாதம் அமெரிக்காவில் இந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகளில் கமல் பிஸியாக இருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் ஷங்கர் இயக்கவிருக்கும் இப்படம் விஜிலண்ட் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    தனுஷின் பர்த்டே பிளான் இதுதான்!

    இந்தியன் 2 படம் 2017-ல் அறிவிக்கப்பட்டு 2019-ல் படப்பிடிப்பு துவங்க திட்டமிடப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக தாமதமானது. படப்பிடிப்பில் இருந்த கிரேன் உடைந்ததில் 3 உதவி இயக்குநர்கள் காயமடைந்து உயிரிழந்தனர். அதன்பிறகு, படம் தாமதமாகி வந்ததால், தற்போது விரைவில் துவங்கும் எனக் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    செஸ் எனக்கு மிகவும் பிடித்த இன்டோர் கேம் - வீரர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

    ‘இந்தியன் 2’ 1996-ல் வெளியான கமல்ஹாசனின் திரைப்படமான ‘இந்தியன்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். அரசு அலுவலகங்களில் ஊழலை மையமாகக் கொண்ட இப்படம் ஊழலுக்கு எதிரான வலுவான கருத்துகளை கொண்டிருந்தது. ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் ஆகியோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Kamal Haasan

    அடுத்த செய்தி