பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை முடித்த கமல்ஹாசன், இப்போது தனது வரவிருக்கும் படமான இந்தியன் 2 படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். ஷங்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதி மற்றும் காந்திகோட்டாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதையடுத்து கமல்ஹாசன் திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகோட்டாவுக்கு ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளார். கமல் மற்றும் அவரது ஒப்பனையாளர் அமிர்தா ராம் ஹெலிகாப்டரில் ஏறும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அவர் தினமும் இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஹெலிகாப்டரில் வந்து செல்கிறார். அவரும் அவரது ஒப்பனையாளர் அம்ரிதா ராமும் ஹெலிகாப்டரில் ஏறும் வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன் புகைப்படத்தை கமல் ஹாசனும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஷங்கர் இயக்கும், இந்தியன் 2 திரைப்படம் அதே பெயரில் 1996-ல் வெளியான திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இப்படம் 2019-ல் படப்பிடிப்பை தொடங்கியது. ஆனால் அதன் பிறகு நடந்த கிரேன் விபத்துக்குப் பிறகு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதோடு கோவிட்-19 தொற்றுநோய், ஷங்கர் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இடையேயான மோதல்கள் காரணமாக இது மேலும் தாமதமானது. சிக்கல்களைச் சரிசெய்த பிறகு, இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2022-ல் மீண்டும் தொடங்கியது.
#Indian2 - #KamalHaasan is reaching the shooting spot in a special helicopter, Tirupati to Gandikota daily💥 pic.twitter.com/LiJ2cQyS29
— SundaR KamaL (@Kamaladdict7) January 31, 2023
இந்தப் படத்தில் கமல்ஹாசன் சேனாபதியாக நடிக்கிறார். காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா மற்றும் குல்ஷன் குரோவர் ஆகியோரும் இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamal Haasan