ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஹெச்.வினோத்துடன் கைகோர்க்கும் கமல் ஹாசன்?

ஹெச்.வினோத்துடன் கைகோர்க்கும் கமல் ஹாசன்?

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

அஜித்தின் ‘துணிவு’ ஜனவரி மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில், கமல்ஹாசன் படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை ஹெச்.வினோத் அதன்பின் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இந்தியன் 2 படத்துக்குப் பிறகு இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    லோகேஷ் கனகராஜின் 'விக்ரம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், கமல் தனது அடுத்தப் படத்தில் இயக்குனர் ஹெச்.வினோத்துடன் இணைவதாகக் கூறப்படுகிறது.

    கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் இந்தப் படத்தைத் தயாரிக்கும் என்றும், 2023-ஆம் ஆண்டின் முதல் பாதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் ஹெச்.வினோத் தற்போது அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தில் பிஸியாக இருப்பதால், கமல்ஹாசன் படத்தின் படப்பிடிப்பு 2023 மத்தியில் துவங்கும் எனக் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அஜித்தின் ‘துணிவு’ ஜனவரி மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில், கமல்ஹாசன் படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை ஹெச்.வினோத் அதன்பின் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'கைதி 2' படம் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், 'விக்ரம் 2' படத்திற்காக கமல்ஹாசனும் லோகேஷ் கனகராஜும் மீண்டும் இணைவதைக் காண காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Kamal Haasan, Tamil Cinema