Home /News /entertainment /

மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் கமல் ஹாசன் - பிரியங்காவுடன் வெளியான வீடியோ!

மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் கமல் ஹாசன் - பிரியங்காவுடன் வெளியான வீடியோ!

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

விக்ரம் படத்தின் புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    விக்ரம் படத்தை ப்ரொமோஷன் செய்யும் விதமாக விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார் கமல் ஹாசன். 

    மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகியப் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் தொடங்கப்பட்ட திரைப்படம் விக்ரம். மூன்று முன்னணி கதாநாயகர்கள் ஒன்றிணைந்து நடிப்பதால் விக்ரம் படத்திற்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்தார். கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக விக்ரம் படப்பிடிப்பு தடை பட்டது. அதன் பிறகு கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, இதனாலும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.

    பின்னர் வெளியூரில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளை சென்னையில் செட் அமைத்து படமாக்கினர். இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பால், விக்ரம் படப்பிடிப்பை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் படக்குழுவினர் தவித்தனர். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல் ஹாசன், விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் முழு வீச்சில் ஈடுபட்டார்.

    திரையில் நெஞ்சுக்கு நீதியை பேசிய தமிழ் படங்கள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    தற்போது இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில், வரும் ஜூன் 3-ம் தேதி படம் வெளியாகவிருக்கிறது. இதையடுத்து விக்ரம் படத்தின் புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார் கமல். அவருடன் லைவ் போன வீடியோவையும் விஜய் டிவி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Kamal Haasan

    அடுத்த செய்தி