ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லோகேஷ் கனகராஜ் - விஜய்யின் 'தளபதி 67’ படத்தில் கமல்?

லோகேஷ் கனகராஜ் - விஜய்யின் 'தளபதி 67’ படத்தில் கமல்?

கமல் - விஜய் - லோகேஷ் கனகராஜ்

கமல் - விஜய் - லோகேஷ் கனகராஜ்

தளபதி 67 அறிவிப்பு டீசரை பார்த்து நடிகர் கமல் ஹாசன் இம்ப்ரெஸ் ஆகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

லோகேஷ் கனகராஜ் இறுதியாக கமல்ஹாசன் நடிப்பில் 'விக்ரம்' படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து தனது அடுத்த படத்திற்காக நடிகர் விஜய்யுடன் இணைந்துள்ளார். விஜய்யின் கேரக்டர் அறிமுக வீடியோ 'தளபதி 67' அறிவிப்பாக இருக்கும் என்றும், அந்த ப்ரோமோ வீடியோ 67 வினாடிகள் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் தனது குருவும், 'விக்ரம்' பட நடிகருமான கமல்ஹாசனிடம் ப்ரோமோவைக் காட்டினாராம், அதைப் பார்த்த அவர் மிகவும் இம்ப்ரெஸ் ஆகியிருக்கிறாராம்.

அதனால் 'தளபதி 67' படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க கமல் பச்சைக்கொடி காட்டியுள்ளாராம். மேலும் இப்படம் லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், படத்தின் கிளைமாக்ஸில் கமல் தோன்ற வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய் இப்படத்தில் 50 வயது கேங்ஸ்டர் கேரக்டரில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

'தளபதி 67' படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விட்டது. சென்னை மற்றும் கொடைக்கானலில் சில சிறிய பகுதிகளின் படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்துள்ளனர். வாரிசு படம் வெளியானதும், தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என முன்பே தெரிவித்திருந்தார் லோகேஷ். தற்போது படம் வெளியாகி 2 வாரங்கள் கழிந்திருக்கும் நிலையில், வெகு விரைவில் தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Lokesh Kanagaraj