முள்ளும் மலரும் படத்துக்கு பண உதவி செய்த கமல்

முள்ளும் மலரும் படப்பிடிப்பு தளம்

மகேந்திரனை வற்புறுத்தி படம் இயக்க வைத்தவர் கமல். முதல் படம் முள்ளும் மலரும். அந்த வாய்ப்பையும் கமலே வாங்கித் தருகிறார்.

  • Share this:
மகேந்திரனின் முள்ளும் மலரும் பல வகைகளில் முக்கியமான படம். ரஜினியிடம் உங்களுக்குப் பிடித்த படங்கள் எவை என்று கேட்டால் முள்ளும் மலரும் படத்தை மறக்காமல் குறிப்பிடுவார். கதை, பாடல்கள், இயக்கம், கேமரா, நடிப்பு என அனைத்தும் சரியான லயத்தில் இணைந்த அரிதான படம்.

தமிழின் தலைசிறந்த படங்களை தந்த மகேந்திரனுக்கு அடிப்படையில் சினிமாவில் ஆர்வமில்லை. அவர் கல்லூரியில் படிக்கையில் அங்கு நடக்கும் நிகழ்ச்சிக்கு எம்ஜிஆர் வருகிறார். மேடையில் மாணவரான மகேந்திரன்வணிக சினிமாக்களின் அபத்தங்கள் குறித்துப் பேச எம்ஜிஆருக்கு அவரைப் பிடித்து போகிறது. மேடையிலேயே பாராட்டுகிறார்.

சென்னையில் சட்டப் படிப்பை பாதியில் நிறுத்தி வறுமை காரணமாக சொந்த ஊருக்கே போன மகேந்திரனை மீண்டும் எம்ஜிஆரே சென்னைக்கு அழைத்து வந்து திரைப்படங்களுக்கு கதைகள் எழுத வைக்கிறார். பல படங்களுக்கு கதைகள் எழுதுகிறார். கதையுடன் வசனம் எழுதிய சிவாஜியின் தங்கப்பதக்கம் மிகப்பெரிய வெற்றி பெறுகிறது. கதாசிரியர் பணி தொடர்கிறது. 1977-ல் எஸ்.பி.முத்துராமனின் ஆடு புலி ஆட்டம் படத்துக்கு கதை, வசனம் எழுதுகிறார். அதில் நடித்த கமலுடன் பழக்கம் ஏற்படுகிறது. அதே வருடம் பாலுமகேந்திராவின் முதல் படம் கோகிலாவில் கமல் நடிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Mullum Malarum, mullum malarum movie, mullum malarum mahendran, mahendran mullum malarum, mahendran, mahendran director, director mahendran, mahendran kamal haasan, kamal haasan mahendran, முள்ளும் மலரும் திரைப்படம், மகேந்திரன், மகேந்திரன் இயக்குனர், இயக்குனர் மகேந்திரன், மகேந்திரன் கமல் ஹாசன், கமல் ஹாசன் மகேந்திரன், முள்ளும் மலரும் திரைப்படம்
முள்ளும் மலரும் படப்பிடிப்பு தளம்


மகேந்திரனை வற்புறுத்தி படம் இயக்க வைத்தவர் கமல். முதல் படம் முள்ளும் மலரும். அந்த வாய்ப்பையும் கமலே வாங்கித் தருகிறார். மகேந்திரனுக்கு முக்கியமான பிரச்சனை, நல்ல கேமராமேன் வேண்டும். அதுக்கென்ன, பிரமாதமான ஆள் ஒருவர் இருக்கிறார் என பாலுமகேந்திராவை அறிமுகப்படுத்துகிறார். இரு பெரும் கலைஞர்கள் இணைந்து, இளையராஜாவின் துணiயுடன் படத்தை சிறப்பாக எடுக்கிறார்கள். கடைசியில் ஒரு பாடல் மட்டும் எடுக்க வேண்டும். இளையராஜா டியூன் கொடுத்து பாடலும் பதிவாகிவிட்டது. அருமையான பாடல். ஆனால், பாடலை படமாக்க பணம் இல்லை என கைவிரித்துவிடுகிறார் தயாரிப்பாளர். பாடல் இருந்தால் தான் படம் சிறப்பாக இருக்கும் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.

Mullum Malarum, mullum malarum movie, mullum malarum mahendran, mahendran mullum malarum, mahendran, mahendran director, director mahendran, mahendran kamal haasan, kamal haasan mahendran, முள்ளும் மலரும் திரைப்படம், மகேந்திரன், மகேந்திரன் இயக்குனர், இயக்குனர் மகேந்திரன், மகேந்திரன் கமல் ஹாசன், கமல் ஹாசன் மகேந்திரன், முள்ளும் மலரும் திரைப்படம்
கமல் ஹாசன் - மகேந்திரன்


மறுபடியும் கமலிடம் செல்கிறார் மகேந்திரன். அவர் சொன்னால் தயாரிப்பாளர் கேட்கலாம். கமல் தயாரிப்பாளரிடம் பேசுகிறார். ஆனால், தனது முடிவில் அவர் உறுதியாக இருக்கிறார். மகேந்திரனோ, அந்தப் பாடல் இல்லையென்றால் படமே இல்லை என்கிறார். இறுதியில், அந்தப் பாடலை படமாக்குவதற்கான செலவை கமல் ஏற்றுக் கொள்ள பாடல் படமாக்கப்படுகிறது. அந்தப் பாடல்தான், நாம் எப்போதும் பார்த்து ரசிக்கும், 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...'உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: