ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Kamal Haasan: கமல் ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை!

Kamal Haasan: கமல் ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை!

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

உடல் சோர்வு, லோசான காய்ச்சல், சலி, இருமல் காரணமாக நேற்று சென்னை ராமசந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல் ஹாசன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆல் டைம் பிளாக்பஸ்டர் 'விக்ரம்' படத்தில் நடித்த கமல், தற்போது 'இந்தியன் 2' படத்திலும் 'பிக் பாஸ் தமிழ் 6' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். அடுத்ததாக எச்.வினோத் இயக்கும் புதிய மல்டிஸ்டாரர் படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் தனது 234-வது படத்திலும் நடிக்க உள்ளார்.

    சமீபத்தில் ஐதராபாத் சென்றிருந்த கமல், அங்கு பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத் பிறந்தநாளில் கலந்துக் கொண்டார். அந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து சென்னை திரும்பிய கமல், உடல் சோர்வு, லோசான காய்ச்சல், சலி, இருமல் காரணமாக நேற்று சென்னை ராமசந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இயக்குநர் கே.விஸ்வநாத்தை சந்தித்த கமல் ஹாசன் - ஓர் எமோஷனல் தருணம்!

    இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் மருத்துவமனை நிர்வாகம், கமல்ஹாசன் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், ஒரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Kamal Haasan