Home /News /entertainment /

பிரதாப் போத்தனின் முழு திறமையும் வெளி வராதது வருத்தம் - கமல்ஹாசன்

பிரதாப் போத்தனின் முழு திறமையும் வெளி வராதது வருத்தம் - கமல்ஹாசன்

கமல்ஹாசன், பிரதாப் போத்தன்.

கமல்ஹாசன், பிரதாப் போத்தன்.

பிரதாப் போத்தனின் நினைவு எங்களுடன் என்றும் இருக்கும் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
பிரதாப் போத்தனின் முழு திறமையும் வெளி வராதது வருத்தம் என கமல்ஹாசன் கூறியுள்ளார். 

மறைந்த நடிகர் இயக்குனர் பிரதாப் போத்தன் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.  அதன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதாப் போதனை அவருடைய அண்ணன் ஹரி போத்தன் மூலமாகவே தனக்கு அறிமுகம் என்று கூறினார்.

அத்துடன் அப்போது மேடை நாடகங்களில் பிரதாப் போத்தன் நடித்து வந்தார். மிகத் திறமையான நடிகர். அதை பார்த்து நானும், அனந்துவும் ஆசான் இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் சினிமா வாய்ப்புக்காக கோரினோம். அதன் பிறகு திரைப்படங்களில் நடித்து வந்தார் என்று தெரிவித்தார்.

Also read... கர்வம் இல்லாத மனிதர் பிரதாப் போத்தன் - நடிகர் கருணாஸ் உருக்கம்!

மிகச் சிறந்த எழுத்தாளர்,  நடிகர் பிரதாப் போத்தன். அவருடைய முழு திறமையும் வெளிவராமல் போனது எங்களுக்கெல்லாம் வருத்தம் அளிக்கிறது எனவும் கமல்ஹாசன் கூறினார்.

மேலும் பிரதாப் போத்தனின் நினைவு எங்களுடன் என்றும் இருக்கும் எனவும் தெரிவித்தார்.  கமல்ஹாசனை தவிர நடிகர் மனோபாலா, நரேன், நடிகை பூர்ணிமா, கனிகா உள்ளிட்டோரும் பிரதாப் போத்தன் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Kamal hassan

அடுத்த செய்தி