அன்பை பகிர்ந்துக் கொண்ட கமல் குடும்பம்! பட் ஸ்ருதி ஹாசன் மிஸ்ஸிங்...

கமல் ஹாசன் குடும்பம்

அனைவரும் இருக்கும் குடும்ப புகைப்படங்களை நடிகை சுஹாசினி, தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

 • Share this:
  நடிகை சுஹாசினி மணிரத்னம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டார். அதில் கமல்ஹாசன், சாருஹாசன், அனு ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் உள்ளிட்டவர்கள் அதில் காணப்பட்டனர்.

  நடிகர் கமல்ஹாசன் சென்னை எல்டம்ஸ் சாலையில் இருக்கும் வீட்டில் வசித்து வந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய பிறகு அந்த வீட்டை கட்சி அலுவலகமாகவும் பயன்படுத்தி வந்தார். இந்த வீட்டை புதுப்பிக்கும் பணி சில நாட்களாக நடந்த நிலையில், தற்போது அந்தப் பணிகள் முடிந்துள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் கமல் ஹாசனின் அண்ணன் சாரு ஹாசன், அண்ணி கோமளம், சுஹாசினி மணிரத்னம், அனு ஹாசன், அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் அந்த வீட்டில் நடந்த பூஜையில் கலந்துக் கொண்டுள்ளனர். இதையடுத்து அனைவரும் இருக்கும் குடும்ப புகைப்படங்களை நடிகை சுஹாசினி, தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஸ்ருதி ஹாசன் எங்கே எனக் கேள்வி எழுப்பினர்.

  தவிர கமல் தற்போது லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: