ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துப்பாக்கியில் ஸ்டைலாக சுடும் பகத் பாசில்... விக்ரம் வீடியோ வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

துப்பாக்கியில் ஸ்டைலாக சுடும் பகத் பாசில்... விக்ரம் வீடியோ வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

விக்ரம் படப்பிடிப்பு

விக்ரம் படப்பிடிப்பு

விக்ரம் படத்தின் 110 நாள் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  விக்ரம் படத்தின் 110 நாள் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக வீடியோவுடன் தெரிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

  மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகியப் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் தொடங்கப்பட்ட திரைப்படம் விக்ரம். மூன்று முன்னணி கதாநாயகர்கள் ஒன்றிணைந்து நடிப்பதால் விக்ரம் படத்திற்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

  இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்தார். கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக விக்ரம் படப்பிடிப்பு தடை பட்டது. அதன் பிறகு கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, இதனாலும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.

  பின்னர் வெளியூரில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளை சென்னையில் செட் அமைத்து படமாக்கினர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய காரணத்தாலும், விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் சமீபத்தில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகினார் கமல்.

  பொண்ணுங்க பலவீனம் இல்ல பலம்ன்னு காட்டணும்... சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ட்ரைலர்

  இந்நிலையில் விக்ரம் படத்தின் 110 நாள் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். சர்ப்ரைஸாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் லோகேஷ் ஆக்‌ஷன் சொல்ல, துப்பாக்கியால் சுடுகிறார் ஃபகத் ஃபாசில். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ, ஃபகத்தின் வலப்புறம் நகர்கிறது. அங்கே படக்குழுவினர் அனைவரும் ‘இட்ஸ் ஏ ராப்’ எனக் கத்துகிறார்கள்.

  Baakiyalakshmi: பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய செழியன்?

  தமிழகத்தில் ஃபகத் ஃபாசிலுக்கென ரசிகைகள் கூட்டம் அதிகரித்திருக்கும் நிலையில், அனைவரும் அந்த வீடியோவுக்கு ஹார்டின் விட்டு வருகிறார்கள்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Vikram, Kamal Haasan, Lokesh Kanagaraj