மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரைப்பற்றி உருக்கமான பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் கமல் ஹாசன்.
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், நடிகர் கமலும் நெருங்கிய நண்பர்கள். கமல்ஹாசனின் பெரும்பாலான படங்களின் பாடல்களை எஸ்பிபி பாடி இருக்கிறார். இளையராஜா, எஸ்.பி.பி, கமல் ஆகிய மூன்று பேரின் கூட்டணியில் வெளியான அத்தனைப் பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சில வாரங்கள் சிகிச்சையில் இருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் மறைந்தார். இதற்கிடையே இன்று அவரது 75-வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில்
கமல்ஹாசன் தனது மறைந்த நண்பருக்காக உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதன் படி, நடிகர் கமல், ”அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த
குரல் வண்ணன், எஸ்பிபிக்கு இன்று
பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு…’” என ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.