ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இயக்குநர் கே.விஸ்வநாத்தை சந்தித்த கமல் ஹாசன் - ஓர் எமோஷனல் தருணம்!

இயக்குநர் கே.விஸ்வநாத்தை சந்தித்த கமல் ஹாசன் - ஓர் எமோஷனல் தருணம்!

கமல் ஹாசன் - கே.விஸ்வநாத்

கமல் ஹாசன் - கே.விஸ்வநாத்

கமல்ஹாசனின் 'சலங்கை ஒலி', 'சிப்பிக்குள் முத்து', 'பாச வலை’ உள்ளிட்ட மறக்க முடியாத படங்களை இயக்கியவர் விஸ்வநாத்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நடிகர் கமல் ஹாசன் பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத்தின் கையை பற்றியிருக்கும் உணர்வுப்பூர்வமான படம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    திரையுலகில் ஆல்ரவுண்டராக இருக்கும் நடிகர் கமல் ஹாசன், மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் உள்ளிட்ட வெகு சிலரையே தனது வழிகாட்டிகளாக கருதுகிறார். அவரின் போற்றுதலுக்குரிய முக்கிய நபர்களில் ஒருவர் தெலுங்கு இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத்.

    விஸ்வநாத்தை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் கமல்ஹாசன் இன்று சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இந்த சந்திப்பில் இயக்குநரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இருவரும் சில மணி நேரங்கள் ஒன்றாக செலவிட்டனர்.

    கமல்ஹாசனின் 'சலங்கை ஒலி', 'சிப்பிக்குள் முத்து', 'பாச வலை’ உள்ளிட்ட மறக்க முடியாத படங்களை இயக்கியவர் விஸ்வநாத். அதோடு கமலுடன் ‘குருதிப்புனல்’, ‘உத்தம வில்லியன்’ ஆகியப் படங்களிலும் நடித்துள்ளார்.

    நான் செஞ்ச பாவம்... உடல்நிலை குறித்து உருக்கமாக பேசிய சீரியல் நடிகர் வேணு அரவிந்த்

    படங்களைப் பொறுத்தவரை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆல் டைம் பிளாக்பஸ்டர் 'விக்ரம்' படத்தில் நடித்த கமல், தற்போது 'இந்தியன் 2' படத்திலும் 'பிக் பாஸ் தமிழ் 6' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். அடுத்ததாக எச்.வினோத் இயக்கும் புதிய மல்டிஸ்டாரர் படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் தனது 234வது படத்திலும் நடிக்க உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Kamal Haasan