Home /News /entertainment /

உதயநிதி ஸ்டாலினை பாராட்டிய கமல் ஹாசன்!

உதயநிதி ஸ்டாலினை பாராட்டிய கமல் ஹாசன்!

உதயநிதி - கமல் ஹாசன்

உதயநிதி - கமல் ஹாசன்

அரசியல் பயணத்தில் இருவரும் வெவ்வேறு பாதையில் சென்றாலும், சினிமா என்று வரும்போது ஒருவரையொருவர் மனம் விட்டு பாராட்டி இருக்கிறார்கள்.

    நெஞ்சுக்கு நீதி படத்தைப் பார்த்துவிட்டு, நடிகர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டியிருக்கிறார் நடிகர் கமல் ஹாசன்.

    கமல்ஹாசன் நடிப்பில் கடந்த மாதம் 'விக்ரம்' திரைப்படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியைப் பெற்றதோடு, இதுவரை உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. மேலும் அந்தப் படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் விநியோகித்திருந்தார். இதற்கிடையே தற்போது உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி படத்தைப் பார்த்து விட்டு, படக்குழுவினரை பாராட்டியிருக்கிறார் கமல். அதோடு 'விக்ரம்' படத்தில் இணைந்ததற்கு வாழ்த்து தெரிவித்து உதய்க்கு நினைவுப்பரிசையும் வழங்கியுள்ளார். பதிலுக்கு உதயநிதி ஸ்டாலின், பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளை கமலுக்கு பரிசளித்துள்ளார்.

    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி, “நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்து குழுவினரை இன்று அழைத்து பாராட்டிய கமல் ஹாசன் சாருக்கு நன்றி. விக்ரம்-ல் உடன் பங்கேற்றதற்காக நினைவுப் பரிசு வழங்கினார். நாங்கள் பெரியார்-அம்பேத்கர் சிலைகளை பரிசளித்து மகிழ்ந்தோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

    பிரமாண்டத்தின் உச்சமாய் பொன்னியின் செல்வன் டீசர்!



    அரசியல் பயணத்தில் இருவரும் வெவ்வேறு பாதையில் சென்றாலும், சினிமா என்று வரும்போது ஒருவரையொருவர் மனம் விட்டு பாராட்டி இருக்கிறார்கள். உதயநிதியுடன் 'நெஞ்சுக்கு நீதி' இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரும் கமல்ஹாசனை சந்தித்துள்ளனர்.

    விஜய் மக்கள் இயக்க செயல்பாடுகளில் சந்தேகத்தைக் கிளப்பிய எஸ்.ஏ.சந்திரசேகர்

    லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம்' திரைப்படம் உலகளவில் ரூ.400-கோடிக்கும், இந்தியாவில் 300 கோடிக்கும், தமிழ்நாட்டில் 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளது. இதற்கிடையில், 'விக்ரம்' படம் OTT-ல் நேற்றிரவு வெளியானது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Kamal Haasan, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி