நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் செம்பியம் படக்குழுவினர்.
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் விக்ரம் படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக செம்பி படக்குழுவினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது செம்பி படத்தின் டிரைலரை கமல்ஹாசன்
பார்த்து வெகுவாக பாராட்டினார்.
செம்பி படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரைடெண்ட் ரவீந்திரன்,
ஏ .ஆர் .எண்டர்டைன்மெண்ட் ரியா , ஆடிட்டர் அக்பர் அலி, படத்தின் இயக்குநர் பிரபு சாலமன், கோவை சரளா மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர்.
மேலும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கோவை சரளாவை நடிப்பு ராட்சசி என்று கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
செம்பி படத்தின் டிரைலரை கமல்ஹாசன் பாராட்டியது தங்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதாகவும், படம் விரைவில் திரைக்கு வர தயாராகி வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.