Home /News /entertainment /

அன்றைய சரித்திரம், மீண்டும் அதை நினைவுறுத்துவோம் - உதயநிதி ஸ்டாலினை வாழ்த்திய கமல் ஹாசன்!

அன்றைய சரித்திரம், மீண்டும் அதை நினைவுறுத்துவோம் - உதயநிதி ஸ்டாலினை வாழ்த்திய கமல் ஹாசன்!

உதயநிதி ஸ்டாலின் - கமல் ஹாசன்

உதயநிதி ஸ்டாலின் - கமல் ஹாசன்

ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் 54-வது படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார்.

    தம்பி உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி வரவேற்கிறேன் என நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    நடிகர் கமல் ஹாசன் இறுதியாக விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடித்தனர். இப்படம் நான்கு வெவ்வேறு மொழிகளில் வெளியாகியது.

    விக்ரம் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்தது. இதற்கிடையே ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் நோக்கில் திங்கட்கிழமை சென்னையில் விழா ஒன்று நடந்தது. அதில் தனது தயாரிப்பு நிறுவனத்தில் பங்களிப்பு செய்தவர்களை கெளரவித்தார் உதய். அந்த நிகழ்வில் தனது தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அறிவிப்பை வெளியிட்டார் கமல்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உதயநிதி படத்தைத் தயாரிக்கும் கமல் ஹாசன் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!



    ஆம், கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் 54-வது படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். தற்போது அந்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் கமல், அன்றைய சரித்திரம், மீண்டும் அதை நினைவுறுத்துவோம்! தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    அதற்கு, ‘நன்றி சார்... என்னால் முடிந்தளவு சிறப்பாக செய்வேன்’ என்று தெரிவித்திருக்கிறார் உதயநிதி.
    Published by:Shalini C
    First published:

    Tags: Kamal Haasan

    அடுத்த செய்தி