Tokyo Olympics 2021: ’நீங்கள் தான் உண்மையான உலக நாயகர்கள்’ - ஒலிம்பிக் வீரர்களை பாராட்டிய கமல்!

வீடியோ காலில் பேசும் கமல் ஹாசன்

வறுமையின் பிடியில் இருந்த போதும் சாதனையாளர்களாகத் திகழும் நீங்கள், உண்மையான ‘உலக நாயகர்கள்’ என்று போட்டியாளர்களை பாராட்டினார் கமல்

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுடன் நடிகர் கமல் ஹாசன் காணொளி மூலம் உரையாடினார்.

    நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை காணொளி மூலம் தொடர்புகொண்டு, அவர்கள் வெற்றியடைய வாழ்த்துகளை தெரிவித்தார். தடகள வீரர், வீராங்கனைகளான ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோருடன் அவர் கலந்துரையாடினார்.

    “வறுமையின் பிடியில் இருந்த போதும் சாதனையாளர்களாகத் திகழும் நீங்கள், உண்மையான ‘உலக நாயகர்கள்’ என்று போட்டியாளர்களை பாராட்டிய கமல், இந்தியாவை உலகமே திரும்பி பார்க்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள். ”ஒரு பெரிய பேரரசு கூட 500 வருடத்திற்கு மேல் கிடையாது. ஏழ்மையும் அப்படித்தான். ஒரு திறமைசாலி நினைத்தால் ஏழ்மையை ஓட ஓட விரட்ட முடியும்.” என்றார்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதோடு “இந்தியாவின் ‘தங்கச்சுரங்கம்’ நீங்கள், வெறும் தங்க பதக்கம் அல்ல. நீங்கள் கற்றவையை மற்றவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். அது நீங்கள் செய்யவேண்டிய கடமை. போட்டியை நிதானமாக, பதற்றமின்றி எதிர்கொள்ளுங்கள். உங்கள் மீது நீங்கள் கொண்டுள்ள சுய மரியாதையை போலவே, உங்கள் விளையாட்டையும் மரியாதையுடன் எதிர்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றியுடன் திரும்பும்போது உங்களை பாராட்ட நாங்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம்.” என்றார்.

    டோக்கியோ ஒலிம்பிக் வரும் 23-ம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: