ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கமலஹாசன்

நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கமலஹாசன்

கமல் மற்றும் விஜய்

கமல் மற்றும் விஜய்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :

நடிகர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

நடிகர் விஜய் தன்னுடைய 48-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் பல திரை நட்சத்திரங்கள் அவருக்கு சமூக வலைதளங்களிலும், தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், நடிகர் விஜயை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிறிது நேரம் பேசிய அவர்கள் சினிமா துறை மற்றும் நிலை குறித்தும் பேசியுள்ளனர் என கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் விஜய், கமல்ஹாசனுக்கு விக்ரம் திரைப்பட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார் எனவும் கூறப்படுகிறது.

நடிகர் கமலஹாசன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் மூலம் நடிகர் விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ளது.

Also read... நடிகர் விஜய் பாடிய பாடல்கள் ஒரு லிஸ்ட்!

ஆனால் அந்த திரைப்படம் குறித்த இறுதி வடிவம் இன்னும் முடிவாகாமல் உள்ளது. இந்த நிலையில்தான் நடிகர் கமல்ஹாசன் விஜய்க்கு தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay, Kamal Haasan