Home /News /entertainment /

Queen Elizabeth: எலிசபெத் ராணி கலந்துக் கொண்ட ஒரே திரைப்பட விழா... கமல் ஹாசன் உருக்கம்

Queen Elizabeth: எலிசபெத் ராணி கலந்துக் கொண்ட ஒரே திரைப்பட விழா... கமல் ஹாசன் உருக்கம்

எலிசபெத் ராணியுடன் கமல் ஹாசன்

எலிசபெத் ராணியுடன் கமல் ஹாசன்

5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இங்கிலாந்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த எலிசபெத் மகாராணி மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 

    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்.

    5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இனி எனக்கும் என் வளர்ப்பு மகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - முற்றுப்புள்ளி வைத்த ராஜ்கிரண்!



    21 ஏப்ரல் 1926-ல் லண்டனில் உள்ள மேஃபேரில் பிறந்த எலிசபெத் மகாராணி, பிரிட்டிஷ் வரலாற்றில் சுமார் 70 ஆண்டுகாலம் அரசபதவியில் இருந்தவர். அவர் தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவியேற்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Kamal Haasan

    அடுத்த செய்தி