Home /News /entertainment /

அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் முன்னணி இடத்தில் கமல் - விஜய்... எவ்வளவு தெரியுமா?

அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் முன்னணி இடத்தில் கமல் - விஜய்... எவ்வளவு தெரியுமா?

கமல் ஹாசன் - விஜய்

கமல் ஹாசன் - விஜய்

கமல்ஹாசனும் விஜய்யும் தங்களின் அடுத்தப் படங்களுக்கு சுமார் 130 கோடி ரூபாய் சம்பளமாக பெறுவதாக சினிமா பத்திரிக்கை ஒன்றின் லேட்டஸ்ட் ரிப்போர்ட் தெரிவிக்கிறது.

    நடிகர்கள் கமல் ஹாசனும், விஜய்யும் தங்கள் அடுத்தப் படங்களுக்கு சம்பளமாக ரூ.130 கோடி பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக 'விக்ரம்' திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் ரூ.450 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதேசமயம், விஜய் கடைசியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும் அந்தப் படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்தது.

    தற்போது, கமல்ஹாசனும் விஜய்யும் தங்களின் அடுத்தப் படங்களுக்கு சுமார் 130 கோடி ரூபாய் சம்பளமாக பெறுவதாக சினிமா பத்திரிக்கை ஒன்றின் லேட்டஸ்ட் ரிப்போர்ட் தெரிவிக்கிறது. தற்போது 'வாரிசு' படத்தில் நடித்து வரும் விஜய், அந்தப் படத்திற்காக 120 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் தனது 67-வது படத்திற்காக தன்னுடைய பேக்கேஜை சற்று உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் தளபதி 67 படத்திற்கு விஜய், ரூ 130 கோடி சம்பளமாகப் பெறுவதாக கூறப்படுகிறது.

    விஜய் விலையில்லா விருந்தகத்தில் அஜித் பெயரில் விருந்து!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மறுபுறம், கமல்ஹாசன் தனது அடுத்த படத்திற்கு 130 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் சம்பளம் பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இரு நடிகர்களும் தங்கள் அடுத்த படங்களை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், கமல்ஹாசன் விரைவில் 'இந்தியன் 2' படத்திற்கான பணிகளை மீண்டும் தொடங்குகிறார். அதற்காக அவர் அமெரிக்கா செல்கிறார். தவிர, 'இந்தியன் 2' படத்திற்குப் பிறகு தனது அடுத்த படத்திற்காக பா.ரஞ்சித் அல்லது மகேஷ் நாராயணனுடன் கமல் ஹாசன் கைகோர்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Kamal Haasan

    அடுத்த செய்தி