விக்ரம் படத்தின் அடுத்த பாகம் குறித்து கமல் வெளியிட்டுள்ள அப்டேட்டால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் கடந்த வாரம் வெளியான விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை பார்க்கும்போது இந்தப் படம் தமிழில் அதிகம் வசூல் செய்த படங்களில் ஒன்றாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நடிப்பில் சூரர்களாக இருக்கும் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசிலை திறமையாக கையாண்டு ரசிகர்களுக்கு சரியான ட்ரீட்டை லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் கொடுத்துள்ளார்.
குறிப்பாக க்ளைமேக்ஸில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா வரும் காட்சி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க - ‘’லைஃப் டைம் செட்டில்மென்ட்’’ – கமல் எழுதிய பாராட்டு கடிதத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்…
விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா நடித்துள்ளார். இந்த கேரக்டரையே தனி படமாக எடுக்க வேண்டும் என்று சூர்யாவின் ரசிகர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
விக்ரம் படத்தில் நடிப்பதற்காக சூர்யா சம்பளம் ஏதும் பெறவில்லை என்று தகவல்கள் வெளியானது. அதனை இன்று வீடியோ வெளியிட்ட கமல், அன்புக்காக சூர்யா செய்தார் என்று கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.
விக்ரம் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக மாற்றிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கமல் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், ‘கடைசி 3 நிமிடங்களே திரையரங்குகளை அதிர வைத்த என் அன்பு தம்பி சூர்யா, அன்புக்காக மட்டுமே அதை செய்தார்.
இதையும் படிங்க - தனுஷ் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அப்டேட்…
அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டி விடலாம் என்று இருக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் விக்ரம் அடுத்த பாகத்தில் ரோலக்ஸ் முழுவதுமாக வருவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.