சூப்பர் ஸ்டார் மகனுடன் காதலில் விழுந்த சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்?

நடிகர் மோகன்லாலும், இயக்குநர் பிரியர்ஷனும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதால், கல்யாணி பிரியதர்ஷனும், பிரணவ்வும் சிறுவயது முதலே நட்பாக பழகி வந்துள்ளனர்.

news18
Updated: October 12, 2019, 3:33 PM IST
சூப்பர் ஸ்டார் மகனுடன் காதலில் விழுந்த சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்?
கல்யாணி பிரியதர்ஷன்
news18
Updated: October 12, 2019, 3:33 PM IST
மோகன்லால் மகனும், கல்யாணி பிரிதர்ஷனும் காதலில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். ஹலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தற்போது சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கல்யாணி பிரியர்ஷனும், பிரபல நடிகர் மோகன்லாலின் மகனுமான பிரணவ்வும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் மோகன்லாலும், இயக்குநர் பிரியர்ஷனும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதால், கல்யாணி பிரியதர்ஷனும், பிரணவ்வும் சிறுவயது முதலே நட்பாக பழகி வந்துள்ளனர். அந்த நட்பு தற்போது காதலாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் தனது காதல் குறித்து ஏற்கெனவே பேட்டியளித்திருக்கும் கல்யாணி பிரியதர்ஷன், எனது காதல் குடும்பத்தினருக்கு தெரியும். எதிர்காலத்தில் அவரையே திருமணம் செய்வேன். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை” என்று கூறியிருந்தார். இருப்பினும் தன்னை விடாமல் துரத்தும் இந்த காதல் கிசுகிசுக்களுக்கு கல்யாணி பிரியதர்ஷனின் பதிலே முற்றுப்புள்ளி வைக்கும்.

வீடியோ பார்க்க: சினிமாவில்தான் தைரியசாலி; நிஜத்தில்...! மனம் திறந்த தமன்னா

Loading...

First published: October 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...