அஜித் படத்தில் நாயகியாக நடிக்கும் புகழ்பெற்ற இயக்குநரின் மகள்

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

news18
Updated: December 17, 2018, 5:53 PM IST
அஜித் படத்தில் நாயகியாக நடிக்கும் புகழ்பெற்ற இயக்குநரின் மகள்
கல்யாணி பிரியதர்ஷன்
news18
Updated: December 17, 2018, 5:53 PM IST
அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஸ்வாசம் படத்தை அடுத்து நடிகர் அஜித் பிங்க் என்ற இந்திப்பட ரீமேக்கில் நடிக்கிறார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் வினோத் இந்தப் படத்தை இயக்குகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்துள்ளார். படத்துக்கான பணிகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. படம் அஜித்தின் பிறந்த நாளான மே 1-2019-ல் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



படத்தின் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளில் புகழ்பெற்ற இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தம் அடிக்கும் அமலாபால்... அன்புமணியை வம்புக்கு இழுக்கும் விஜய் ரசிகர்கள்!




நடிகை கல்யாணி ‘ஹலோ’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வரும் இவர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க வான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

காதல் மன்னன் அஜித் வளர்ந்த கதை - வீடியோ

First published: December 17, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...