Home /News /entertainment /

‘அநீதிக்கு வன்முறை தீர்வு அல்ல’ – கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து நடிகை குஷ்பு கருத்து

‘அநீதிக்கு வன்முறை தீர்வு அல்ல’ – கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து நடிகை குஷ்பு கருத்து

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு

Kallakuruchi Issue : 4வது நாளான இன்று நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி அவர்கள் தாக்க தொடங்கினர்.

    கள்ளக் குறிச்சி சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு அநீதிக்கு வன்முறை தீர்வு அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் மாணவி ஜூலை 13-ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி விவகாரம்.. கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன்? காயத்ரி ரகுராம் கேள்வி

    மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    4வது நாளான இன்று அவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி அவர்கள் தாக்க தொடங்கினர்.

    பதிலுக்கு போலீசாரும் கற்களை வீசி தாக்கியும் தடியடி நடத்தியும் அவர்களை கலைக்க முயன்றனர். இதற்கிடையே, மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

    இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, ‘கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களால் தான் சித்திரவதை செய்யப்பட்டதாக உயிரிழந்த மாணவி குற்றம் சாட்டியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு காரணம் இவர்கள் தான்.. அன்புமணி ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு

    இந்த சம்பவம் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். நீதியை நிலைநாட்ட நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம் ஆனால் வன்முறை அநீதிக்கு தீர்வாகாது. வன்முறை நிறுத்தப்பட வேண்டும். நீதிக்காக போராடுபவர்களுடன் நாம் இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

    தற்போதைய நிலவரப்படி, கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மீது நடந்த வன்முறையை கண்டித்து, தனியார் பள்ளிகள் நாளை திறக்கப்படாது என தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

    அப்படி திறக்கப்படாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Kushboo

    அடுத்த செய்தி