Kalidas Jayaram: ரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்!

Kalidas Jayaram: ரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்!

காளிதாஸ் ஜெயராம்

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் ரஜினி படத்தில் நடிக்கிறார். ‘அண்ணாத்த’ படமா என யோசிக்காதீர்கள். அவர் அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘ரஜினி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

  • Share this:
    நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் ரஜினி படத்தில் நடிக்கிறார். ‘அண்ணாத்த’ படமா என யோசிக்காதீர்கள். அவர் அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘ரஜினி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    தமிழ் மற்றும் மலையாளத்தில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ். தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் படம் மூலம் அறிமுகமான இவர், பின்னர் ஒரு பக்க கதை படத்திலும் ஹீரோவாக நடித்தார். இது தவிர ‘புத்தம் புது காலை’, ‘பாவக்கதைகள்’ போன்ற ஆந்தாலஜி படங்களிலும் நடித்து பிரபலமானார்.

    இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இப்படத்தை வினில் வர்கீஸ் இயக்குகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை நமீதா பிரமோத் நடிக்கிறார்.

    மலையாளத்தில் இந்தப் படத்திற்கு ‘ரஜினி’ என பெயர் வைத்துள்ளனர். ஆனால் தமிழில் ஏற்கனவே, இதே பெயரில் வேறொரு படம் தயாராகி வருவதால், தமிழில் ‘ரஜினி ரசிகன்’ எனப் பெயரிடப்படும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தில் காளிதாஸ், ரஜினிகாந்தின் தீவிர ரசிகனாக நடிப்பதால் படத்திற்கு, ரஜினி என தலைப்பு வைத்துள்ளார்களாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    சிறந்த கதைகள்