ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இவர்தான் காதலியா? மாடல் நடிகையுடன் நெருக்கமான புகைப்படம் பகிர்ந்த காளிதாஸ் ஜெயராம்!

இவர்தான் காதலியா? மாடல் நடிகையுடன் நெருக்கமான புகைப்படம் பகிர்ந்த காளிதாஸ் ஜெயராம்!

காளிதாஸ் ஜெயராம்

காளிதாஸ் ஜெயராம்

மாடலும் நடிகையுமான தாரிணி காளிங்கராயருடன் தன்னுடைய நெருக்கமான புகைப்படத்தை பகிர்ந்து காதலுக்கான ஹிண்டையும் கொடுத்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் காளிதாஸ் ஜெயராம் தன்னுடைய இன்ஸ்டா ரசிகர்களுக்கு நேற்று ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். மாடலும் நடிகையுமான தாரிணி காளிங்கராயருடன் தன்னுடைய நெருக்கமான புகைப்படத்தை பகிர்ந்து காதலுக்கான ஹிண்டையும் கொடுத்துள்ளார். இதன்மூலம் காளிதாஸ் காதல் திருமணத்துக்கு தயாராகிவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். துபாயின் சொகுசு படகு ஒன்றில் தாரிணியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தைத்தான் தன்னுடய இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் காளிதாஸ். விளக்கமான கேப்ஷன் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றாலும் ஹார்ட்டின் விட்டு மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Kalidas Jayaram (@kalidas_jayaram)  காளிதாஸ் ஜெயராம்..

  மலையாளம் மற்றும் தமிழில் நடித்து பிரபலமானவர் ஜெயராம். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில்கூட ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் நடித்து கவனிக்க வைத்தார். அவரது மகனான காளிதாஸூம் சினிமாவில் நடித்து வருகிறார். மலையாளம் மற்றும் தமிழில் நடித்து வரும் காளிதாஸ், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் கவனிக்க வைத்தார்.

  இதையும் படிங்க:  ''நாயகன் என்னை உலுக்கியது; தூங்கவிடாமல் செய்தார் மணிரத்னம்'' - பாரதிராஜா பகிர்ந்த வார்த்தைகள்!

  முன்னதாக பாவக்கதைகள் அந்தாலஜி படத்தில் தங்கம் என்ற பாத்திரத்தில் நடித்து கோலிவுட்டில் தனிக்கவனம் பெற்றார். இதற்கிடையே காளிதாஸை சுற்றி காதல் கதைகளும் வலம் வந்தன. நீண்டநாள் தோழியை அவர் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. அது தொடர்பாக எதையுமே பேசாத காளிதாஸ் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Kalidas Jayaram (@kalidas_jayaram)  தாரிணி..

  காளிதாஸ் பகிர்ந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின்போதும் குடும்ப புகைப்படத்தில் இடம்பெற்று இருந்தார் தாரிணி. அப்போதே காதல் கிசுகிசு கிளம்பியது. தாரிணி மாடலிங் செய்து வருகிறார். சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இவர் மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவில் 3ம் இடம்பிடித்தவர்.

  Published by:Murugadoss C
  First published: