என்.டி.ஆர், எம்.ஜி.ஆர் வரிசையில் விமலுக்கு பெயர் வைத்த ஓவியா - ’களவாணி 2 ட்ரெய்லர்’

என்.டி.ஆர், எம்.ஜி.ஆர் வரிசையில் விமலுக்கு பெயர் வைத்த ஓவியா - ’களவாணி 2 ட்ரெய்லர்’
விமல் உடன் ஆர்.ஜே.விக்னேஷ்
  • News18
  • Last Updated: April 14, 2019, 6:14 PM IST
  • Share this:
‘களவாணி 2’ படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு களவாணி படம் வெளியானது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஓவியா அறிமுகமாகி விமலுக்கு ஜோடியானார். இவர்களுடன் சரண்யா, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இளவரசு, சூரி, திருமுருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதல் மற்றும் நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.

இந்தப் படம் வெளியாகி 9 வருடங்களாகும் நிலையில் தற்போது படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விமல் ஓவியா மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். முதல் பாகம் காதல் நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் நடிகர் விமல் அரசியல்வாதியாக வலம் வர இருக்கிறார்.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் சரண்யா பொன்வண்ணன் பேசிய " ஆனி போயி ஆடி போயி ஆவணி வந்துச்சுனா பையன் டாப்ல வருவான் " என்ற வசனம் மீண்டும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது. மேலும் அரசியல்ல நல்லவனுக்கு காலமில்லை, களவாணித்தனம் தான் கை கொடுக்கும் என்ற வசனமும் இடம்பெற்றிருப்பதன் மூலம் நகைச்சுவை கலந்த அரசியல் சட்டையர் படமாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

களவாணி படத்தில் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த சூரி இந்தப் படத்தில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக ஆர்.ஜே.விக்னேஷ் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தளபதி 63: கேப்டனாக நடிக்கும் இந்துஜாவின் அட்டகாசமான புகைப்படங்கள்!வீடியோ பார்க்க: ஜே.கே.ரித்திஷ் உடலுக்கு அஞ்சலி: கண்கலங்கி நினைவுகூர்ந்த பிரபலங்கள்


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading