முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தின் ஹீரோ இவர்தான் !

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தின் ஹீரோ இவர்தான் !

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது எஸ்கே புரொடக்சன்ஸ் சார்பாக ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்சன்ஸ் சார்பாக கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார். டாக்டர், டான் தவிர மற்ற படங்களில் புதுமுகங்களுக்கு தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வாய்ப்பு வழங்கி அவர்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி தந்திருக்கிறார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது எஸ்கே புரொடக்சன்ஸ் சார்பாக ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார்.

இந்தப் படத்துக்கான அறிவிப்பு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என தவகல் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் யார், ஹீரோ யார் என்பது தொடர்பான தகவல் எதுவும் இல்லை. இந்த நிலையில் இந்தப் படத்தில் கலையரசன் ஹீரோவாக நடிக்கிறாராம். மற்ற விவரங்கள் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலையரசன் நடிப்பில் கடைசியாக பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது, உதயநிதி ஸ்டாலின் கலகத் தலைவன் ஆகிய படங்களும் வெற்றிமாறன் தயாரித்த பேட்டைக்காளி வெப் சீரிஸும் வெளியாகியிருந்தது.

மேலும் obeli என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள பத்து தல படத்திலும் கலையரசன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வருகிற 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

First published: