• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'என்றும் முதன்மை நீங்களே’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கலைப்புலி தாணு!

'என்றும் முதன்மை நீங்களே’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கலைப்புலி தாணு!

மு.க.ஸ்டாலின் - கலைப்புலி தாணு

மு.க.ஸ்டாலின் - கலைப்புலி தாணு

அசுரன் படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன், தனுஷ் மற்றும் கலைப்புலி தாணு தேசிய விருது பெற்றுள்ளனர்.

  • Share this:
    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அசுரன் படக்குழுவின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

    இந்திய சினிமாவில் சிறந்த படைப்புகளுக்கான தேசிய விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக 2019-ம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு வர தாமதமானது. கடந்த மார்ச் மாதம் இதற்கான அறிவிப்புகள் வெளியாகின.

    இதில் சிறந்த படமாக வெற்றிமாறனின் அசுரனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகரான தனுஷ் அறிவிக்கப்பட்டார். அதேபோல் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர நடிகர் (துணை நடிகர்) விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. விஸ்வாசம் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளராக டி.இமானும், பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படத்துக்கு சிறப்பு ஜூரி விருதும், சிறந்த ஒலிப்பதிவுக்காக ரசூல் பூக்குட்டிக்கும் விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த குழந்தை நட்சத்திரமாக நாக விஷாலுக்கு (கருப்புதுரை) தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து நேற்று டெல்லியில் இவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பிரபலங்களுக்கு தேசிய விருதினை வழங்கினார். முன்னதாக தமிழகத்தில் இருந்து விருது பெறும் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.



    இந்நிலையில், அசுரன் படக்குழுவினர் சார்பாக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. “விருதுகள் கரம் சேரும் முன்பே, வந்து சேர்ந்த உங்கள் வாழ்த்து குரல். என்றும் முதன்மை நீங்களே... எங்கள் நெஞ்சம் நிறை மாண்புமிகு முதல்வரே.. நன்றிகள் கோடி” என அதில் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: