Kalaipuli S Thanu-Allu Arjun: அல்லு அர்ஜூனின் மெகா பட்ஜெட் படத்தைத் தயாரிக்கும் கலைப்புலி தாணு?

கலைப்புலி எஸ் தாணு - அல்லு அர்ஜூன்

அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை தமிழின் முன்னணி இயக்குனர் இயக்குவார் என தாணு கூறியுள்ளார்.

  • Share this:
    தெலுங்கின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் படத்தை தயாரிக்கவிருப்பதாக தாணு கூறியுள்ளார்.

    துப்பாக்கி, தெறி, அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த வி கிரியேஷன்ஸ் தாணு தற்போது அசுரனின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பாவை, தயாரிப்பாளர் சுரேஷ் பாபுடன் இணைந்து தயாரித்து வருகிறார். நாரப்பாவின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் படம் வெளியாக உள்ளது. தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தையும் தாணு தயாரிக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

    இந்நிலையில், தெலுங்கின் முன்னணி இளம் நாயகன் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் தயாரிப்பதாகவும், முன்னணி தமிழ் இயக்குனர் ஒருவர் அதனை இயக்கவிருப்பதாகவும் தாணு நெருக்கமான வட்டாரங்களில் கூறியுள்ளார். ஆந்திரா, தெலுங்கானா மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளம், வடஇந்தியா என எங்கும் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது படம் வெளியானதும் மலையாளத்தில் டப் செய்யப்படும். கேரளாவில் அல்லு அர்ஜுனுக்கு ரசிகைகள் அதிகம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த சில வருடங்களாக அவர் நடித்தப் படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூபில் வெளியாகின்றன. அவற்றை பல கோடி பேர்கள் பார்க்கிறார்கள். உதாரணமாக, அவரது சரைனையுடு திரைப்படத்தை இதுவரை 70 கோடி பேர்கள் பார்த்துள்ளனர். இது அஜித், விஜய் படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகம். இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலை ஐஎம்டிபி தளம் வெளியிட்டது. அதில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா திரைப்படம் முதலிடம் பெற்றது. இது அவரது மாஸ் இமேஜ் குறித்த கோட்டுச்சித்திரம்.

    அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை தமிழின் முன்னணி இயக்குனர் இயக்குவார் என தாணு கூறியுள்ளார். அவர் யார் என்பதை விரைவில் அவரே அறிவிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் தயாராகும் என்பது நிச்சயம். இந்தியையும் சேர்த்து பான் - இந்தியன் திரைப்படமாக தயாராகவும் வாய்ப்புள்ளது.
    லிங்குசாமி அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்து, கடைசியில் அந்த வாய்ப்பு அவருக்கு கை நழுவிப் போனது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: