Home /News /entertainment /

தனுஷின் நானே வருவேன் படம் குறித்து இன்று மாலை வெளியாகும் முக்கிய அப்டேட்!

தனுஷின் நானே வருவேன் படம் குறித்து இன்று மாலை வெளியாகும் முக்கிய அப்டேட்!

தனுஷ் மற்றும் செல்வராகவன்

தனுஷ் மற்றும் செல்வராகவன்

மயக்கம் என்ன படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படம் குறித்து முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று தயாரிப்பாளர் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    மயக்கம் என்ன படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

    இந்தப் படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக வரும் 30ம் தேதி பொன்னியின் செல்வன் படத்துடன் நானே வருவேன் படத்தை களமிறக்க தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டு இருக்கிறார்.

    அதில் முதல் கட்டமாக செப்டம்பர் 11ம் தேதி ஒரு விருது வழங்கும் விழாவில் படத்தின் டிரைலரை வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறன.

    இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதேபோல் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார் என கூறுகின்றனர்.

    Also read... நீயே மண் மின்னும் வெண்தாரகை... தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

    நானே வருவேன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அவர் தற்போது படத்திற்கு பின்னணி இசை கோர்ப்பு வேலைகளில் ஈடுபாட்டுள்ளார். அது முடிவடைந்ததும் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கவுள்ளனர்.



    இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள் எதிர்பார்ப்பு மகிழ்ந்திடும் வண்ணம் நானே வருவேன் படத்தை பற்றிய நற்செய்தி மாலை 6:20'க்கு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor dhanush, Director selvaragavan

    அடுத்த செய்தி