என் திறமையை வளர்த்து கொள்ள முன்னோடியாக இருந்ததில் கலைஞரும் ஒருவர். அவரே முதலீடு செய்தது போல் என்னுடைய கதையை கலைஞர் இருந்து கேட்பார் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் மட்டுமே பங்கேற்றனர்.
நிகழ்வில் மேடையில் பேசிய இயக்குநர் லோகேஷ், நடிகர் கமல்ஹாசனை பார்த்து தான் சினிமாவை கற்றுக் கொண்டேன். என்னுடைய முதல் நன்றி கமல்ஹாசனுக்கு தான். விக்ரம் திரைப்படத்தில் திருப்திகரமான விஷயம் ஒன்று நடந்துள்ளதாகவும் படத்தை பார்த்தால் புரியும் என்றார்.
தொடர்ந்து மேடையில் பேசிய கமல்ஹாசன், படத்தில் கூட என்னை இவ்வளவு வேலை வாங்கவில்லை. தற்போது சுழன்று சுழன்று தான் வேலை செய்ய வேண்டி உள்ளது. இங்கு நான் தாமதமாக வருவதற்கு இந்த மாநகரம் தான் காரணம் எனவும், 4 வருடம் என் ரசிகர்களை காக்க வைத்ததற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றார்.
அனிருத், லோகேஷ் மற்றும் படக்குழு நன்கு தூங்க வேண்டும் கடின உழைப்பை போட்டுள்ளனர். நல்ல படங்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
இது விக்ரம் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு உங்க கேள்விகளுக்கு அந்த ரோடு வந்தால் பதில் சொல்கிறேன் (அரசியல் கேள்விகளுக்கு) என்றார்.
— Raaj Kamal Films International (@RKFI) May 25, 2022
லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி சொன்னால் அன்னியப்பட்டு போவார் என்பதால் சொல்லவில்லை. நாங்கள் ஒரு நல்ல படத்தை எடுக்க முயற்சி செய்துள்ளோம். அதில் வெற்றி பெற்றுள்ளதாக நம்புகிறோம். என்னிடம் பெரிய அளவில் பணம் இல்லை.என்னுடைய வருமானத்தை மக்களுக்காக பயன்படுத்துவேன் எனக் கூறிய அவர் , ரசிகர்களுக்கு நல்ல ஒரு விருந்து காத்திருக்கிறது.
அகண்ட திரையில் இந்த படத்தை பாருங்கள். உங்களுடைய அகண்ட மனதை ஏற்கனவே காட்டிவிட்டீர்கள் என சூசகமாக பேசினார். நான் ஒரு ரூபாய் செல்வு செய்தால் என்னுடைய ரசிகர்கள் 20 ரூபாய் செலவு செய்வார்கள்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,கொரோனா எப்படி இருந்தது என்று நாடு அறியும். அது இல்லாத காலம் என்று ஒன்றை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். சுகாதாரம் இல்லாத இடத்தில் எல்லாம் படபிடிப்பு நடத்தினோம். ஆனால் பாதுகாப்பாக இருந்தோம்.
கலைஞர் பற்றி சினிமாகாரனாக பேச 1000 உள்ளது. ஆனால் அவர் பிறந்த நாள் அன்று படம் வெளியாவது எதிர்பாராமல் அமைந்தது. நான் தசாவதாரம் படம் எடுத்த போது அவரே படம் செய்வது போல என்னிடம் கதையை கேட்டார். என் திறமையை வளர்த்து கொள்ள முன்னோடியாக இருந்ததில் கலைஞரும் ஒருவர். அவரே முதலீடு செய்தது போல் என்னுடைய கதையை கலைஞர் இருந்து கேட்பார். கலைஞர் சொன்னது என் மனதில் ரீங்கரித்து கொண்டே உள்ளது என்றார்.
விக்ரம் 3க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர். அது நான் முடிவு செய்து விட்டேன். அதே போல் அடுத்து வரும் படங்களில் இந்தியன் 2 நிச்சயம் இடம் பெறும்.
மேலும் ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே வரிகளின் கேள்விக்கு பதில் அளித்த அவர், பத்திரிகையாளர் எல்லாம் கூடியிருக்கும் இடமும் ஒன்றியம் தான், இயக்குநர் ஒன்றியத்தில் தவறு நடந்தால் கூட படம் கெட்டு போகும். நடிகர்கள் ஒன்றியத்தில் கூட தவறு நடந்தால் கூட படம் வெற்றி பெறாது. இதை இவ்வாறு எடுத்து கொள்ளலாம் என்றார்.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.