ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Kalaga Thalaivan Review: நடிப்பில் ஸ்கோர் செய்தாரா உதயநிதி? கலகத் தலைவன் விமர்சனம்!

Kalaga Thalaivan Review: நடிப்பில் ஸ்கோர் செய்தாரா உதயநிதி? கலகத் தலைவன் விமர்சனம்!

கலகத் தலைவன்

கலகத் தலைவன்

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கலகத் தலைவன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் இன்று கலகத் தலைவன் திரைப்படம் வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது? ட்விட்டர் வாசிகள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.

  ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் படங்களை எடுப்பதில் இயக்குனர் மகிழ்திருமேனி நிபுணத்துவம் வாய்ந்தவர். அவர் இயக்கிய தடையற தாக்க, மீகாமன், தடம் ஆகியப் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது மீண்டும் த்ரில்லர் ஜானரில் கலக தலைவன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கலகத் தலைவன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

  படத்தைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

  ஒரு டீசண்ட் த்ரில்லர். ரயில் நிலைய காட்சி நன்றாக இருக்கிறது. கிளைமாக்ஸ் போர்ஷன் செம. ஹீரோயின் காட்சிகள் மொக்கை. ஹீரோயின் போர்ஷனை மொத்தமாக தூக்கியிருக்கலாம். இசை நன்றாக இல்லை. உதய், ஆரவ் & கலை நடிப்பு நன்றாக உள்ளது. தடம் அளவுக்கு இல்லை ஆனால் பார்க்கலாம்.

  சிறந்த திரைக்கதை, அற்புதமான எழுத்து மற்றும் வலுவான செய்தியுடன் கூடிய சிறந்த மற்றும் தீவிரமான படம். அனைத்து நடிகர்கள் மற்றும் ஒவ்வொரு துறையின் கடின உழைப்பு வெளிப்படையாக தெரிகிறது. வாழ்த்துக்கள்

  உதயநிதி ஸ்டாலின் ப்ரோ. ஹேட்ஸ் ஆஃப் மகிழ் சார்!

  உதயநிதி ஸ்டாலின் கரியரில் மிகச்சிறந்த படம்.

  இசையும், ஹீரோயின் போர்ஷனும் நன்றாக இல்லை என இந்த பயனர் தெரிவித்துள்ளார்.

  நுனி இருக்கையில் அமரும் அளவுக்கு இடைவெளி காட்சி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

  கதைக்கு உதயநிதி ஸ்டாலின் பொருத்தமாக இருக்கிறார்.

  உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக இவர் குறிப்பிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Udhayanidhi Stalin