• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சிகாகோ சர்வதேச திரைப்பட விழாவில் டொவினோ தாமஸின் களை திரைப்படம்!

சிகாகோ சர்வதேச திரைப்பட விழாவில் டொவினோ தாமஸின் களை திரைப்படம்!

டொவினோ தாமஸ்

டொவினோ தாமஸ்

ஆண்மை, வீரம் என்று தினவெடுத்த ஒரு நபர், போதையில் ஒரு நாயை கொன்றுவிடுகிறான். நாய்க்கு சொந்தக்காரனான நாடோடி தமிழ் இளைஞன் அந்த நபரை வீடு தேடி வந்து அடித்து கதறவிடுவதுதான் கதை.

  • News18
  • Last Updated :
  • Share this:
2021 சிகாகோ சர்வதேச இந்தியன் திரைப்பட விழாவில் திரையிட டொவினோ தாமஸின் களை திரைப்படம் தேர்வாகியுள்ளது.

கடந்த சில வருடங்களாக மலையாள சினிமாவின் முன்வரிசையை நோக்கி முன்னேறி வருகிறார் டொவினோ தாமஸ். ஒருபக்கம் லூசிபர், குருப் போன்ற படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மறுபக்கம் கோதா, களை போன்ற படங்களில் தனி ஹீரோவாக கலக்குகிறார். இதில் களை திரைப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார்.

ஆண்மை, வீரம் என்று தினவெடுத்த ஒரு நபர், போதையில் ஒரு நாயை கொன்றுவிடுகிறான். நாய்க்கு சொந்தக்காரனான நாடோடி தமிழ் இளைஞன் அந்த நபரை வீடு தேடி வந்து அடித்து கதறவிடுவதுதான் கதை.

இதில் அந்த திமிர் பிடித்த இளைஞனாக டொவினோ தாமஸ் நடித்திருந்தார். இறுதிக்காட்சியில் தமிழ் இளைஞன் அடித்து ஜட்டியோடு ஓடவிட கழிவறைக்குள் சென்று பதுங்கிக் கொள்கிற வேடம். தான் தயாரிக்கிற ஒரு படத்தில் இதுபோன்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க பண்பட்ட கலை மனம் வேண்டும். அந்த மனம் டொவினோ தாமஸை சிகாகோ திரைப்பட விழாவரை கொண்டு  சேர்த்திருக்கிறது.



டிசம்பர் 24 அவர் நடித்துள்ள மின்னல் முரளி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. மலையாளத்தின் முதல் சூப்பர் ஹீரோ படம் இது. மின்னல் முரளி என்ற கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லரிலேயே மிரட்டியுள்ளனர். இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.

இதன் புரமோஷனுக்காக சமீபத்தில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை டொவினோ தாமஸ் சந்தித்தார். நடிகர் சல்மான் கானையும் சந்தித்தார். அந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட அவர், சினிமாவுக்கு வருவதற்கு முன் உடம்பை கட்டுக்கோப்பாக வைக்க தூண்டியவர் சல்மான் கான். பணிவாக இருப்பதற்கும் அவர்தான் உந்துதலாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.



Also read... சர்வதேச திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடிக்கும் சமந்தா!

இந்தியாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருந்தும் தன்னிடம் எளிமையாக நடந்து கொண்டதை வைத்து இப்படி பதிவிட்டுள்ளார் டொவினோ. மின்னல் முரளி வெளியான பிறகு டொவினோ தாமஸின் ஸ்டார் வேல்யூ பல மடங்கு உயரும் என்பது நிச்சயம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: