ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கஜோலின் சலாம் வெங்கி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கஜோலின் சலாம் வெங்கி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரேவதி, கஜோல்

ரேவதி, கஜோல்

திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட கஜோல் கடைசியாக நெட்பிளிக்ஸின் Tribhanga திரைப்படத்தில் நடித்திருந்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை ரேவதி இயக்கத்தில் கஜோல் நடிப்பில் உருவாகியுள்ள சலாம் வெங்கி திரைப்படம் வரும் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகை ரேவதி சிறந்த இயக்குனரும் கூட. 2002 இல் தேசிய விருது பெற்ற மித்ர மை பிரண்ட் திரைப்படத்தை இயக்கினார். 2004 இல் அவர் இயக்கிய பிர் மிலேங்கே திரைப்படமும் விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்றது. இவ்விரு திரைப்படங்களும் இந்தியில் எடுக்கப்பட்டவை. பல வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் தயாரான கேரள கஃபே ஆந்தாலஜியில் ஒரு கதையை  இயக்கியிருந்தார். அப்படி இதுவரை மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார். மூன்றுமே விமர்சனரீதியாக பாராட்டையும், சில விருதுகளையும் பெற்றவை.

இப்போது அவர் இயக்கியிருக்கும் திரைப்படத்திற்கு சலாம் வெங்கி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுஜாதா என்ற கதாபாத்திரத்தில் கஜோல் நடிக்கிறார். படம் குறித்து முன்னதாக தெரிவித்திருந்த கஜோல், "சொல்லப்படவேண்டிய கதை... தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை... கொண்டாட வேண்டிய வாழ்க்கையை.. நாங்கள் தொடங்கியிருக்கிறோம்.

Also read... தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக திகழ்வதற்கு இது தான் காரணம் - இயக்குநர் வெற்றிமாறன்

சலாம் வெங்கியின் நம்ப முடியாத கதையை உங்களுடன் பகிர காத்திருக்கிறோம்" என குறிப்பிட்டிருந்தார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட கஜோல் கடைசியாக நெட்பிளிக்ஸின் Tribhanga திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சலாம் வெங்கியை  சூரஜ் சிங், ஷ்ரத்தா அகர்வால், வர்ஷா குக்ரஜா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)படத்தின் நாயகி கஜோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”எங்களது படத்திற்கான தேதி இது 09.12.2022. உங்களுக்கு அருகில் உள்ள திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகும்” என்றும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Revathi, Kajol