முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கஜோல் நடிப்பில் சலாம் வெங்கி திரைப்படத்தை தொடங்கிய நடிகை ரேவதி

கஜோல் நடிப்பில் சலாம் வெங்கி திரைப்படத்தை தொடங்கிய நடிகை ரேவதி

 நடிகை ரேவதி, கஜோல்

நடிகை ரேவதி, கஜோல்

சலாம் வெங்கியை  சூரஜ் சிங், ஷ்ரத்தா அகர்வால், வர்ஷா குக்ரஜா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். லோனாவாலா வில் இதன் முதல்கட்ட  படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகை ரேவதி கஜோல் நடிப்பில் இந்திப் படம் ஒன்றை இயக்குகிறார் என சில வாரங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். நேற்று அந்தத் திரைப்படம் முறைப்படி தொடங்கப்பட்டது.

நடிகை ரேவதி சிறந்த இயக்குனரும் கூட. 2002 இல் தேசிய விருது பெற்ற மித்ர மை பிரண்ட் திரைப்படத்தை இயக்கினார். 2004 இல் அவர் இயக்கிய பிர் மிலேங்கே திரைப்படமும் விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்றது. இவ்விரு திரைப்படங்களும் இந்தியில் எடுக்கப்பட்டவை. பல வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் தயாரான கேரள கஃபே ஆந்தாலஜியில் ஒரு கதையை  இயக்கியிருந்தார். அப்படி இதுவரை மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார். மூன்றுமே விமர்சனரீதியாக பாராட்டையும், சில விருதுகளையும் பெற்றவை.

இப்போது அவர் இயக்க இருக்கும் திரைப்படத்திற்கு சலாம் வெங்கி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுஜாதா என்ற கதாபாத்திரத்தில் கஜோல் நடிக்கிறார். படம் குறித்து தெரிவித்திருக்கும் கஜோல், "சொல்லப்படவேண்டிய கதை... தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை... கொண்டாட வேண்டிய வாழ்க்கையை.. இன்று நாங்கள் தொடங்கியிருக்கிறோம்.

Also read... பிரேம்ஜியுடன் கல்யாணமா? பாடகி வினைதா விளக்கம்

சலாம் வெங்கியின் நம்ப முடியாத கதையை உங்களுடன் பகிர காத்திருக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட கஜோல் கடைசியாக நெட்பிளிக்ஸின் Tribhanga திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சலாம் வெங்கியை  சூரஜ் சிங், ஷ்ரத்தா அகர்வால், வர்ஷா குக்ரஜா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். லோனாவாலா வில் இதன் முதல்கட்ட  படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

First published:

Tags: Actress Revathi, Kajol