• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அமேசான் ப்ரைமில் வெளியாகும் காஜல் அகர்வாலின் பாரிஸ் பாரிஸ்?

அமேசான் ப்ரைமில் வெளியாகும் காஜல் அகர்வாலின் பாரிஸ் பாரிஸ்?

பாரிஸ் பாரிஸ் பட டீசரில் காஜல் அகர்வால்

பாரிஸ் பாரிஸ் பட டீசரில் காஜல் அகர்வால்

காஜர் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
    கங்கணா ரணாவத் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான குயின் படத்தின் ரீமேக் தான் பாரிஸ் பாரிஸ். தமிழில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்தப் படம் தெலுங்கில் ‘தட் ஈஸ் மஹாலட்சுமி, கன்னடத்தில் ‘பட்டர்ஃபிளை’, மலையாளத்தில் ‘ஜாம் ஜாம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

    தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கு ரீமேக்கில் தமன்னா, கன்னட ரீமேக்கில் பருல் யாதவ், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். மலையாலத்தில் நீலகண்டா, தெலுங்கில் பிரசாந்த் வர்மா ஆகியோர் இயக்கியுள்ளனர்.

    இந்தப் படத்தில் விருதுநகரைச் சேர்ந்த பரமேஸ்வரி என்ற பெண்ணாக நடித்துள்ள காஜல், ஒரு இளைஞரை காதலிக்கிறார். ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் திடீர் என காஜலுடனான திருமணத்தை அவரது காதலன் நிறுத்துகிறார். பின்னர் தேனிலவுக்காக இருவரும் இணைந்து புக் செய்திருந்த பாரிஸ் நகருக்கு காஜல் மட்டும் தனியாக செல்கிறார். அங்கு அவருக்கு ஏற்படும் அனுபவங்களே படத்தின் கதை.



    படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக தணிக்கைக் குழுவினர் தெரிவித்ததால், படத்தின் பணிகள் முடிவடைந்த பின்னரும் திரைக்கு வர தாமதமானது.



    இந்நிலையில் ‘குயின்’படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்குகளை ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அமேசான் ப்ரைம் நிறுவனம் இந்தப் படங்களை கைப்பற்றியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: